டாப் டக்கர்!



சிதையும் கூட்டுக்குடும்ப வாழ்வின் மேன்மையையும் விவசாயத்தின் அவசியத்தையும் லட்சி யமாகக் கொண்ட ‘கடைக்குட்டி சிங்கம்’ டாப் டக்கர் படைப்பு.
- மனோகர், கோவை; நடராஜன், திருமுல்லைவாயில்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு பயன்படும் ஆக்சிடோசினுக்கு இப்படியொரு பிரச்னையா? அதிரவைத்தது கட்டுரை.
- டி.முருகேசன், கங்களாஞ்சேரி; ஜவகர் பிரேம்குமார், பெரியகுளம்; பூதலிங்கம், நாகர்கோவில்; சீனிவாசன், எஸ்.வி.நகரம்.

மொழிப்போர் தியாகியான அரங்கநாதனின் பேத்திக்கு படிப்பில் ஏற்பட்ட தடங்கல் விலகியதும் மனமகிழ்ச்சி தந்தது.
- பாக்கியவதி, மேக்கா மண்டபம்; முத்துவேல், கருப்பூர்.

பிரபல மனிதர்களின் மனதைப் படித்த உணர்வை சத்யஜோதி தியாகராஜனின் மனம் திறந்த பேட்டி வெளிப்படுத்தியது.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை; முருகேசன், கங்களாஞ்சேரி; லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

தந்தையின் நம்பிக்கையைக் குலைக்காமல் 18 வயதில் டிவி இயக்குநரான சுந்தர் கே.விஜயனின் உழைப்பு அசரவைத்தது.
- ஆர்.சண்முகராஜ், திருவொற்றியூர்; லக்‌ஷித், மடிப்பாக்கம்.

உடல்பருமன், தொப்பை, பிபி, சர்க்கரை என அத்தனைக்கும் அரிசிதான் காரணம் என்பது பகீர் ஷாக் ரிப்போர்ட்.
- டி.முருகேசன், கங்களாஞ்சேரி; எஸ்.பூதலிங்கம், நாகர்கோவில்; சண்முகராஜ், திருவொற்றியூர்; முத்துவேல், கருப்பூர்; லக்‌ஷித், மடிப்பாக்கம்;
மதுபாக்யா, திருநெல்வேலி.

காரைக்குடியில் பாரதியாரின் கவிதை வரிகளுடன் வீட்டை மியூசியமாக்கியுள்ள மகாதேவனின் முயற்சி மிராக்கிள்.
- முத்துவேல், கருப்பூர்; வளையாபதி, தோட்டக்குறிச்சி; பிரேமாபாபு, மடிப்பாக்கம்; வளர்மதி, கன்னியாகுமரி; கைவல்லியம், மானகிரி; ராமகிருஷ்ணன், மதுரை; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

ராஜா சந்திரசேகரின் இருத்தல் கவிதை, ஹார்ட்பீட்டை எகிறச்செய்தது.
- முத்துவேல், கருப்பூர்; ஜெயச்சந்திரபாபு, சென்னை; சேவுகப்பெருமாள், பெருமகளூர்; ராஜ்குமார், குன்னூர்.

முதல் ரயில் போக்குவரத்தையும் ராயபுரம் ஸ்டேஷனின் பெருமையையும் சொன்ன தலபுராணம், சென்னையின் கம்பீரம்!
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; பாக்கியவதி, மேக்கா மண்டபம்; மியாவ்சின், கே.கே.நகர்; சீனிவாசன், எஸ்.வி.நகரம்.

பார்க்டவுனிலுள்ள தஞ்சாவூர் கட்டையன் மிலிட்டரி ஹோட்டல் பிரியாணியும் மட்டன் வடையும் பார்த்ததுமே வாயில் எச்சிலூறியது.
- முத்துவேல், கருப்பூர்; சந்திரமதி, சென்னை; ராம.கண்ணன், திருநெல்வேலி; சித்ரா, திருவாரூர்.

- ரீடர்ஸ் வாய்ஸ்