என்கிரிப்ஷன் தேர்வுகள்



தேர்வுகளுக்கு முன்னதாக கேள்வித்தாள்கள் லீக்காகும் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க சிபிஎஸ்இ வாரியம், என்கிரிப்ஷன் கேள்வித்தாள்களைத் தயாரித்து மாணவர்களுக்கு வழங்கவுள்ளது. இவ்வாண்டில் சிபிஎஸ்இ நடத்திய எகனாமிக்ஸ் தேர்வுத்தாள் திடீரென வெளியானதால் மறுதேர்வு நடத்தும் தர்மசங்கடம் உருவானது. இவற்றைத் தவிர்க்கும் முகமாக சிபிஎஸ்இ வாரியத்தின் அதிரடி யோசனைதான் ரகசிய கேள்வித்தாள்கள்.

இம்முறையில் தேர்வு நடைபெறும் நாளன்றுதான் என்கிரிப்ஷன் கேள்வித்தாள்கள் தேர்வு மையத்துக்கு இணையம் வழியாக அனுப்பி வைக்கப்படும். அங்கீகாரம் பெற்றவர் அதனைப் பெற்று உடனே பரபரவென ஜெராக்ஸ் போட்டு மாணவர்களுக்குக் கொடுத்து தேர்வு நடத்திவிடலாம். ஆனால், தேர்வுமையத்தில் பாயும் புலி வேகத்தில் இணைய இணைப்பு, பிரிண்டர்கள், ஜெராக்ஸ் மெஷின்கள், காசுக்கு விலைபோகாத ஊழியர்கள் இருக்கவேண்டியது அவசியம்!   

- ரோனி