கவிதை வனம்



மௌனம் கலைதல்

ஓர் ஊடலுக்குப்
பின்பான
மரநிழல் திண்ணை
சந்திப்பில்
ஒருநபர் இடைவெளியில்
அமர்ந்தபடி
நீ பேசத்
தொடங்குவாயென நானும்
நான் பேசத்
தொடங்குவேனென நீயும்
நீண்ட நிச்சலன
அமைதியில்
நம் மௌனத்தைக்
கலைக்க
முயற்சித்துக்கொண்டிருந்தன
உதிரும் பெயர் தெரியாத
மஞ்சள் நிறப் பூக்கள்.
- கோவிந்த் பகவான்

துறட்டி

காய்ந்த புற்களை
கறும்பும் ஆடுகளுக்கு
தண்ணீர்
காட்டவியலாது
நீரின்றி வறண்ட
கண்மாய் கரையில்
பொய்த்த மழை குறித்த
கூரிய பத முனை கொண்ட
நீண்ட கேள்வியொன்றை
தாவாங்கட்டைக்கு
அண்டக் கொடுத்து
கவலையில் ஆழ்ந்திருந்தான்
ஆடு மேய்ப்பவன்.

- பா.ரமேஷ்