General Knowledge!



வைர தமன்னா
ஒரு நடிகை தன் உறவினர் வீட்டு ஃபங்ஷனுக்கு சென்றால் சம்பந்தப்பட்ட சொந்தக்காரர்தானே மகிழ்வார்? தமன்னா விஷயத்தில் இது உல்டா. மும்பையில் இருக்கும் அவரது உறவினரின் வீட்டு விசேஷத்துக்கு திடீரென்று சென்றிருக்கிறார். மகிழ்ந்த சொந்தக்காரர், வந்திருந்தவர்களுக்கு எல்லாம் தமன்னாவை அறிமுகம் செய்திருக்கிறார். அப்போது விருந்தாளியாக அங்கு வந்திருந்த ஒருவர் தமன்னாவுக்கு வைரங்கள் பதித்த கடிகாரத்தை பரிசாக அளித்து இன்ப அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார்.

அனுஷ்காக்ராஃப்!
ரசிகர்கள் ஆட்டோகிராப் கேட்டு காகிதத்தை நீட்டினால், சிரித்துக்கொண்டே அதை வாங்கி, ‘smile always... love...’ என்று கையெழுத்திடுவது அனுஷ்காவின் வழக்கம். இதுவரை இன்ஸ்டாகிராம் பக்கம் வராமல் இருந்தவர், இப்போது அங்கேயும் அதிரடி என்ட்ரி ஆகியிருக்கிறார். வாம்மா மின்னல்!

பாலிவுட் டைரக்டர் பிரகாஷ்ராஜ் தமிழில்
‘நரகாசூரன்’ படப்பிடிப்பை முடித்துவிட்டு, இந்தியில் ‘நம்ம’ பிரகாஷ்ராஜ் இயக்கத்தில் நானாபடேகர் நடிக்கும் ‘தட்கா’வில் நடித்து வருகிறார் ஸ்ரேயா. இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தில் டாப்ஸிக்கும் மெயின் கேரக்டர் உண்டாம்.

Volare கோன்!
‘பத்மாவத்’துக்குப் பிறகு இரட்டிப்பு உற்சாகத்தில் இருக்கிறார் தீபிகா படுகோன். ஒன்று, அதன் தெறி ஹிட். அடுத்தது, ‘இந்திய சினிமாவில் மிகச்சிறந்த பங்களிப்பை தீபிகா அளித்திருக்கிறார்’ என்று இத்தாலிய தூதரகம் தங்கள் நாட்டின் கவுரவமிக்க விருதான ‘volare 2018’-ஐ அவருக்கு வழங்கியிருப்பது.இப்போது பத்மாவதி செம ஹேப்பி!

உபிச 2
தமிழில் கைவசம் இரண்டு படங்கள் வைத்திருக்கும் ‘அர்ஜுன் ரெட்டி’ ஷாலினி பாண்டே, நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான ‘நடிகையர் திலக’த்திலும் நடித்துள்ளார், கீர்த்தி சுரேஷுக்கு தோழியாக. இந்த நிழல் நடிப்பு இப்போது ரியல் ஆகியிருக்கிறது. யெஸ். இருவரும் இப்போது பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்.

உபிச 1
‘சினிமாவில் ஹீரோயின்களில் உங்களுக்கு க்ளோஸ் ஃப்ரெண்ட் யார்?’ என ஓவியாவிடம் கேட்டால், சற்றும் யோசிக்காமல் ‘ஐஸ்வர்யா ராஜேஷ்’ என்கிறார் சிரித்துக்கொண்டே! ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ படத்திலிருந்து இவருக்கு அவரும் அவருக்கு இவரும் உடன் பிறவா சகோதரியாக ஆகிவிட்டார்களாம்.

புத்தகப்புழு
சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் ‘சீமராஜா’ படத்தின் பாடல் ஷூட்டிற்காக சாலக்குடி அருவியில் நனைந்து வந்திருக்கிறார் சமந்தா. படப்பிடிப்பு இடையே ஆங்கிலப் புத்தகங்கள் படிக்கும் அவர், லேட்டஸ்ட்டாக, மார்க் மேன்சன் எழுதிய ‘The subtle art of not giving a f*ck’ என்ற புத்தகத்தை வாசித்து முடித்திருக்கிறார். படிப்பாளி பொண்ணு!

நடிகை மீது அமர்ந்த இயக்குநர்!
நயன்தாராவின் ‘இமைக்கா நொடியில்’ நடித்திருக்கும் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், இப்போது இந்தியில் டாப்ஸி நடிப்பில் ‘மன்மர்ஷியான்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். அதன் ஷூட்டிங் பிரேக்கில் டாப்ஸி ரிலாக்ஸாக அமர்ந்து கொண்டிருக்க, அவருக்கு அருகே வந்த அனுராக். ‘டாப்ஸியின் கால் வலு உறுதியானது...’ என்றபடியே அவர் கால்களின் மீது அமர்ந்தார். அனுராக்கின் இந்த ஜாலி கலாட்டாவை க்ளிக்கிய டாப்ஸி, அப்படியே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் தட்டிவிட்டிருக்கிறார் கலர்ஃபுல்லாக!

பெரியம்மா காஜல்!
காஜல் அகர்வாலின் முகமெல்லாம் ஃப்ரெஷ் பூங்கொத்துகள் புன்னகைகளாக மின்னுகின்றன. காரணம், அவரது அன்புத் தங்கை நிஷா அகர்வாலுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்திருப்பதுதான். போதாதா? குட்டி இளவரசனின் ரசிகையாகிவிட்டார் காஜல். படப்பிடிப்பு இடையே அந்த க்யூட் இளவரசனைக் கொஞ்சுவதே அவரது முதல் வேலை.

வேதிகா யணம்
ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா 3’யில் ஓவியாவுடன் சேர்ந்து நடித்து வரும் வேதிகா, திடீரென்று ஒருநாள் இன்ப அதிர்ச்சியில் உறைந்துவிட்டார். அன்று அவருக்கு பிறந்தநாள். இதை நினைவில் வைத்து ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரை கேக் வெட்ட வைத்திருக்கிறார் ஓவியா. ‘அன்புனா அது ஓவியாதான்’ என இப்போது ஓவியா புராணம் பாடுகிறார் வேதிகா.

மோகினி
ப்ரியதர்ஷன் இயக்கிய ‘நிமிர்’ ஹீரோயின் நமீதா ப்ரமோத், மலையாளத்தில் ஒரு டஜன் படங்களுக்கு மேல் நடித்தவர். மோகினி ஆட்ட எக்ஸ்பர்ட்டான நமீ, தமிழில் ஒரு ரவுண்ட் வர விரும்புகிறார். கீர்த்தி சுரேஷ் போல் க்ளாமர் இல்லாமல் நடிக்க ஆசையாம்.

சன்னி லிப்ஸ்
‘மார்க்கெட் உள்ள போதே கலெக்‌ஷனை அள்ளு’ என்ற முடிவுக்கு வந்துவிட்டார் சன்னி லியோன். யெஸ். புதிதாக, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் இறங்கியிருக்கிறார். அதன் முதல்கட்ட முயற்சியாக ‘ஸ்டார் ஸ்ட்ரக்’ என்ற பெயரில் லிப்ஸ்டிக்கை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்திப்ரீத் சிங்
ரகுல் ப்ரீத் சிங்குக்கு இது ராசியான வருடம் போல. நீண்ட இடைவெளிக்குப் பின் பாலிவுட்டிலும் பளபளக்கிறார். அங்கு அஜய் தேவ்கன், சித்தார்த் மல்ஹோத்ரா படங்களில் நடித்து வரும் ரகுல், செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ‘NGK’வில் நடித்து வருவது ஹேப்பி மொமென்ட் என்கிறார்.

தத்துவப் பால்
சமீபத்தில் கண்தானம் செய்து அகம் மகிழ்ந்த அமலாபால், ‘Right to see’ என்ற பாலிஸியோடு ‘அமலா ஹோம்’ என்ற தன்னார்வ நிறுவனத்தை ஆரம்பித்திருக்கிறார். ‘‘அனைவரும் ஒன்றிணைந்தால், அனைவருக்கும் கண்பார்வை கிடைக்கச் செய்யலாம்’’ என்ற தத்துவத்தையும் உதிர்க்கிறார்!

எனர்ஜினா!
தெலுங்கு ‘ஆவ்’ (Awe) படத்துக்கு கிடைத்த பாராட்டால், மறுபடியும் ரெஜினா பிசியாகி இருக்கிறார். இடையே தமிழில் அவர் ஒப்பந்தமான ‘சந்திரமௌலி’க்கு இரண்டு வாரங்கள் தொடர்ந்து கால்ஷீட் கொடுத்து தனது மொத்த டாக்கி போர்ஷனையும் முடித்துவிட்டார்.  ஆக, ரெஜினா இப்ப எனர்ஜினா! நியூயார்க்கில் ‘குவாண்டிகோ’ சீரியலின் ஷூட்டிங்கில் பரபரக்கிறார் ப்ரியங்கா சோப்ரா. ‘உங்க கோ-ஸ்டார்ஸ் யாருடனாவது டேட்டிங் போனதுண்டா?’ எனஅவரிடம் மும்பை மீடியாக்கள் கேட்க, ‘அதற்கு அவசியமே இல்லை. என் கூட நடிக்கறவங்க அத்தனை பேருமே  திருமணமானவங்க...’ என பன்ச் கொடுத்திருக்கிறார். அதுசரி, திருமணத்துக்கும் டேட்டிங்குக்கும் என்ன சம்பந்தம்?!

தொகுப்பு: மை.பாரதிராஜா