ஜிம் பார்ட்டிகளுக்கு தாய்ப்பால்!



தாயில்லாத குழந்தைகளுக்கு இலவசமாக தாய்ப்பால் தந்துதவும் பெண்களை பார்த்திருப்போம். அதெல்லாம் அக்காலம். இக்காலம்? உடற்பயிற்சி செய்பவர்களுக்கு புரதச்சத்துக்காக தாய்ப்பாலை விற்பது! சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த ரஃபேலா லாம்ப்ரூவுக்கு தன் மகன் ஏஞ்சலோ பிறந்த ஏழு மாதத்துக்குப் பிறகும் மார்பில் பாலூறுவது குறையவில்லை.

இதையறிந்த ஜிம் பார்ட்டிகள் அவரை அணுகினர். பல்வேறு புரத உணவுகளை விட தாய்ப்பால் தசைகளை அழகாக்கும் என்பதால் ஒரு அவுன்ஸ் பாலை ஒரு யூரோவுக்கு (ரூ.80) வாங்க ஆரம்பித்தனர். இந்நிமிடம் வரை பாட்டில் போட்டு ஐநூறு லிட்டர்கள் தாய்ப்பாலை விற்றிருக்கிறார் ரஃபேலா!  

- ரோனி