இங்கிலீஷ் லட்சியம்!



உள்ளூரில் தடுமாறாமல் காக்க தாய்மொழி உதவினாலும் பிசினஸ் மொழியான இங்கிலீஷ் கற்காமல் காலம் தள்ளுவது சால கஷ்டம். இந்தியாவில் இதனை உணர்ந்த பழங்குடி கிராமம் ஒன்று சாப்பிடுவது, தூங்குவதற்கு அடுத்து ஆங்கிலத்தை படிப்பதற்கே ஆன்மாவை அர்ப்பணித்துள்ளது. மகாராஷ்டிராவின் ஷிர்பூரிலுள்ள பவாரா இன மாணவர்கள்தான் உறுதியுடன் ஆங்கிலத்தை ஏ டூ இசட் படிப்பவர்கள்.

தாய்மொழியைக் கற்றவர்கள் இப்போது LeapForWord என்ஜிஓமூலம் ஆங்கிலத்தை கசடற படிக்கிறார்கள் பவாரா இனக்குழுவைச் சேர்ந்த ஷாம்லாலின் கல்வி முயற்சி இது. கிராமசபைத் தேர்தலில் வென்றவர் தன் நண்பர்களுடன் இணைந்து ஆங்கிலம் கற்பிக்கும் செயல்பாட்டை 10 ஆண்டுகளாகச் செய்து வருகிறார்.

- ரோனி