டைவர்ஸ் முத்தம்!முத்தம் கொடுக்க போட்டி என்பது பாரீனுக்கு ஓகே. அதுவே இந்தியாவில் நடந்தால் நம் கல்ச்சர் மிக்சராக சிதறிப்போகாதா? ஜார்க்கண்டின் பாகூர் மாவட்டத்திலுள்ள லிட்டிபாராவில் முத்தப்போட்டி நடந்தது. சந்தால் மக்கள் பங்கேற்ற விழாவைச் சிறப்பித்தவர் முக்தி மோர்ச்சா எம்எல்ஏ சைமன் மராந்தி. பிரிட்டிஷ் படைகளை எதிர்த்து போரிட்ட சித்தோ கனு என்ற பழங்குடி வீரரைப் போற்றும் விழாவின் சிறப்பு அம்சம் இது.

ஸ்பெஷல் கிஸ் போட்டியில் 20 ஜோடிகள் பங்கேற்று டஜன் கிஸ்களைக் கொடுத்து மகிழ்ந்தனர். ‘கலாசாரம் போச்சு’ என சர்ச்சை எழ, ‘‘கிஸ் அடித்தால் டைவர்ஸ் குறையும் என்பது அம்மக்களின் நம்பிக்கை!’’ என்று சொல்லி எஸ்கேப் ஆகிவிட்டார் எம்எல்ஏ மராந்தி. காதல் எம்எல்ஏ!

- ரோனி