பயம் போச்சு!



‘அருவி’ பட விமர்சனமும், சுடச்சுட ஆத்மா குளிரும் அதிதி பாலனின் பேட்டியும் சூப்பருங்ணா!
- வி.ஆர்.நடராஜன், திருமுல்லைவாயில்; சங்கீத சரவணன், மயிலாடுதுறை; த.சத்திய நாராயணன், அயன்புரம்; நாகராஜன், திருச்சி;

மணிமாறன், திருவண்ணாமலை; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு. வங்கி டெபாசிட் மற்றும் பேச்சலர் அரசாண்டால் கட்டுரையைப் படித்ததும் மனதிலிருந்த பயம் போயே போச்சு.
- ஆர்.ஜெசி, மடிப்பாக்கம்; மாணிக்கவாசகம், கும்பகோணம்.

எஸ்.கே.யின் பேட்டியும் அவரைப்போலவே நையாண்டியும் எதார்த்தமுமாக செம டேஸ்ட்.
- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; மணிமாறன், திருவண்ணாமலை; சத்தியநாராயணன், சென்னை; மயிலைகோபி, அசோக் நகர்.

ஆண்கள் சட்டை பெண்களின் கவுனாக ஓகே. ஆனால், ஆறாவது பட்டனுக்குக் கீழே எங்கள் மனசு காலி!
- வண்ணை கணேசன், சென்னை; மயிலை கோபி, அசோக்நகர்; ஜெசி, மடிப்பாக்கம்.

டிஎன்ஏ கோடிங் பற்றிய தகவல்கள் சயின்ஸ் பிக்‌ஷன் படம் பார்ப்பதுபோல புதிராகவே இருந்தது.
- மாணிக்கவாசகம், கும்பகோணம்.

கவிதை வனத்தில் வெளியான ‘உருமாற்றம்’, ‘அழகுபார்த்தல்’ கவிதைகள் ரசனையின் உச்சம்.
- எம்.சேவுகப்பெருமாள், பெருமகளூர்; நவீன்சுந்தர், திருச்சி; ஆனி அஞ்சலின், விநாயகபுரம்; நரசிம்மராஜ், மதுரை; பிரேமா பாபு, சென்னை.

இசைஞானி ஃபேமிலி வாரிசான ஹரிகிருஷ்ணா நடிப்பில் அசத்த வாழ்த்துகள்.
- த.சத்தியநாராயணன், சென்னை.

ஊஞ்சல் தேநீரில் தஞ்சை ப்ரகாஷ் நடத்திய யுவர் மெஸ் நினைவுகள் எங்கள் மனதைவிட்டு நீங்கவேயில்லை.
- சந்திரமதி, சென்னை.

87 லட்சம் நூல்களை கம்மி ரேட்டுக்கு விற்கும் பாண்டியனின் பணி அசாதாரணம்.
- காந்தி லெனின், திருச்சி; வளையாபதி, தோட்டக்குறிச்சி; குமார், விழுப்புரம்; நவீன் சுந்தர், திருச்சி; பூதலிங்கம், நாகர்கோவில்; வண்ணை கணேசன், சென்னை; ஜெரிக், கதிர்வேடு; நரசிம்மராஜ், மதுரை.

பாலும் சர்க்கரையும் எடைக்குறைப்புக்கு எதிரிகள் என டேக் இட் ஈஸியாக புரியவைத்துள்ளார் பா.ராகவன்.
- ஹாசிகா, வியாசர்பாடி.

பழைய வண்ணாரப்பேட்டை இவ்வளவு பிரமாண்ட துணிச்சந்தையா? வாயடைத்துப்போனோம்.
- ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; நடராஜன், சென்னை; லக்க்ஷித், சென்னை.

‘டைகர் ஜிந்தா ஹை’ இந்திப்படத்தின் சீக்ரெட் தகவல்கள், அமேசிங்.
- ஜனனி, திருவண்ணாமலை

இறந்தவர்களுக்கு இலவச அடக்க சேவை செய்யும் செல்வராஜின் பணி மகத்தானது.
- எஸ்.பூதலிங்கம், நாகர்கோவில்; ஜானகி ரங்கநாதன், சென்னை; சீனிவாசன், எஸ்.வி.நகரம்.

58 வாரங்களாக அமானுஷ்ய உலகில் அட்வென்ச்சர் த்ரில்லுடன் பயணிக்க வைத்து க்ளைமேக்ஸ் ஆக்‌ஷனில் பிரமிக்கவைத்துவிட்டார் கே.என்.சிவராமன்.
- எஸ்.பூதலிங்கம், நாகர்கோவில்; சத்தியநாராயணன், சென்னை.

- ரீடர்ஸ் வாய்ஸ்