கொலைவெறி தாய்ப்பாசம்!
தாய்ப்பாசம் இந்தியர்களின் விட்டுக்கொடுக்க முடியாத ஸ்பெஷல் குணம். ஆனால், லிமிட் தாண்டினால்...? ராஜஸ்தானைச் சேர்ந்த தீபாராம், தன் தாய் மேல் ஆகாயம் அளவுக்கு பாசம் கொண்டவர். மேரேஜ் ஆனபின் அவரது மனைவிகள் இருவரும் தன்னைப் போலவே தாயிடம் பிரியமாக இருக்கவேண்டும் என்றால் நடக்கிற காரியமா அது?
 அம்மாவை மனைவிகள் சரியாக கவனிப்பதில்லை என பொருமலில் இருந்த தீபாராம், அடுத்து செய்த அட்டெம்ப்ட்தான் அவரை சிறையில் தள்ளியது. தன் இரு மனைவிகளையும் அன்பாக காரில் அழைத்துச் சென்று, இருவரையும் உள்ளே வைத்து லாக் செய்தவர், காரை போகிக்கு எரிப்பது போல கொளுத்திவிட்டார். சற்று தூரத்தில் நின்றபடி மனைவிகள் துடித்து இறப்பதை ரசித்த தீபாராமை போலீஸ் லாக்கப்பில் தள்ளியுள்ளது.
- ரோனி
|