ரெட் அலர்ட்!
* ஜீனில் புற்றுநோயை அறிந்து உயிரைக்காக்கலாம் என ரெட் அலர்ட் செய்த குங்குமத்திற்கு நன்றி! - ஜானகி ரங்கநாதன், சென்னை; சிவக்குமார், திருச்சி; சீனிவாசன், எஸ்.வி.நகரம்; மனோகர், கோவை; நாகராஜன், திருச்சி.
* ‘கீ’ படத்தில் ஜீவா, நிக்கியின் ஜோடிப்பொருத்தம் செம சங்கதி சொல்லுகிறதே, கீப் இட் அப்! - த.சத்தியநாராயணன், அயன்புரம்; சங்கீதசரவணன், மயிலாடுதுறை; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; மயிலை கோபி, அசோக்நகர்; நாகராஜன், திருச்சி; லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.
* தமிழர்களான நாங்கள் பாரீன் டூர் போக, டிரான்ஸ்லேஷன் கேட்ஜெட் வாங்க காத்திருக்கோம்! - பூதலிங்கம், நாகர்கோவில்; அக்ஷயா, திருவண்ணாமலை; பிரீத்தி, செங்கல்பட்டு; பொன்.கருணாநிதி, பொள்ளாச்சி.
 * அனைவருக்கும் சொந்தவீடு தரும் ஓடந்துறை சண்முகத்தின் ஒப்பற்ற முயற்சிக்கு பாராட்டுகள்! - சத்தியநாராயணன், சென்னை; ஜானகி ரங்கநாதன், சென்னை; குமார், விழுப்புரம்; லட்சுமி நாராயணன், வடலூர்; பூதலிங்கம், நாகர் கோவில்; சங்கீத சரவணன், மயிலாடுதுறை; சைமன் தேவா, விநாயகபுரம்; கைவல்லியம், மானகிரி; மயிலை கோபி, அசோக்நகர்; பொன்.கருணாநிதி, பொள்ளாச்சி.
* ரேஸ்கோர்ஸை வலம் வந்த திருப்தியோடு படுசுவாரசிய தகவல்களைத் தந்தது ‘அறிந்த இடம் அறியாத விஷயம்’ பகுதி. - வண்ணை கணேசன், சென்னை; வளையாபதி, தோட்டக்குறிச்சி; டி.எஸ்.தேவா, கதிர்வேடு.
* ‘பாகுபலி-2’ சிறுகதை இம்மியளவும் கற்பனையல்ல. உண்மையோடு சிறிது காமெடி கலந்து தந்துள்ள சுரேந்தர்நாத்துக்கு கங்கிராட்ஸ்! - ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்.
* வாலி பற்றி யுகபாரதி எழுதியுள்ள பதிவு மறக்கமுடியாதது. - பொன்.கருணாநிதி, பொள்ளாச்சி; மனோகர், கோவை.
* சினிமா காலணி எக்ஸ்பர்ட் குமாரின் பேட்டியும் படங்களும் பரவசப் பட்டாசு. - சீனிவாசன், எஸ்.வி நகரம்; சைமன்தேவா, விநாயகபுரம். ராமகண்ணன், திருநெல்வேலி; சிவக்குமார், திருச்சி; கைவல்லியம், மானகிரி; ஆசை மணிமாறன், திருவண்ணாமலை.
* தொட்டில் மீன்கள், பறவையான சிறகு என இருகவிதைகளும் நன்றாக இருந்தன. - பிரீத்தி, செங்கல்பட்டு.
* பிரச்னைகளின்றி தன் கிராமத்து மக்கள் உறங்க உழைக்கும் பீகாரின் ரிது ஜெய்ஸ்வாலை சக்தியின் வடிவமாக பார்ப்பதில் வியப்பில்லை. - மனோகர், கோவை; பூதலிங்கம், நாகர்கோவில்.
* சீனாவின் நண்டு மியூசியத்தில் அந்த மேட்டருக்கு சூப்பர்னு சொல்லி பச்ச புள்ளைங்களான எங்களை கெடுக்கறீங்களே சார்! நாய்க்கு ஏபிசி சொல்லும் ஆள் மட்டும் கையில் கிடைத்தால் அவ்வளவுதான். சிகரெட் ஹாலிடே, புகைபிடிப்பதை தடுக்க ஆசம் ஐடியா. ஒரு பக்க செய்திகள் புதுமை பிளஸ் சுவாரசியமாக சுகர் பால்கோவாய் இனித்தன. - சண்முகராஜ், சென்னை; சைமன்தேவா, விநாயகபுரம்.
|