லவ்லி திருடர்!



- ரோனி

நம் ரெகுலர் வாழ்க்கையிலேயே குபீர் காமெடிகள் நடக்கும்போது, சின்சியராக வேலை செய்து போலீஸ்காரர்களை ஓவர்டைம் பார்க்க வைக்கும் திருடர்களின் லைஃப் மட்டும் உப்பில்லாத உப்புமா போலவா இருக்கும்? அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள டூநட் கடையில் கல்லாப்பெட்டியை அபேஸ் செய்ய மூன்று திருடர்கள் உள்ளே என்ட்ரியானார்கள். உள்ளே இருந்த கத்தை கத்தையான பணம், வாடிக்கையாளர்களின் ஸ்மார்ட் போன்களை டெடிகேஷனாக திருடியவர்கள், க்ளைமேக்ஸில் செய்ததுதான் ஆசம்.

கடையை விட்டு வெளியேறும்போது, கவுண்டரில் நின்ற கஸ்டமருக்கு ஒரே ஒரு டூநட் தந்துவிட்டு சென்றிருக்கிறார் திருடர்களில் லவ்லி திருடர் ஒருவர். செக்யூரிட்டி கேமராவில் பதிவாகியுள்ள இக்காட்சி இணையத்தில் ஆஹா ஹிட் அடித்துள்ளது.