கல்விக்காக ரயில் பிச்சை!



- ரோனி

மும்பையைச் சேர்ந்த சந்தீப் தேசாய், கடந்த ஐந்து ஆண்டுகளாக லோக்கல் ட்ரெயினில் பிச்சை எடுத்துவருகிறார். எதற்குத் தெரியுமா? 700 ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக! ஸ்லோகா மிஷனரி எனும் என்ஜிஓ சார்பில் 1 கோடி ரூபாய் திரட்டத்தான் இந்த பிச்சை அட்டெம்ப்ட். ‘‘2010 ஆம் ஆண்டு முதல் ட்ரெயினில் கல்விக்காக பிச்சை எடுத்து வருகிறேன்.

சில ஆண்டுகளில் ஒரு கோடி லட்சியத்தை அடைந்து விடுவேன்...’’ என்கிறார் மரைன் எஞ்சினியரான சந்தீப் தேசாய். 2009ம் ஆண்டில் இந்திய அரசு RTE சட்டப்படி, தனியார் பள்ளிகளிலும் ஏழைக் குழந்தைகளுக்காக 25% இட ஒதுக்கீடு அளிக்க உத்தரவிட்டும் இதுதான் நிலைமை!