கவிதை வனம்
மெனோபாஸ்
இளமையின் அடையாளங்கள் உருக பெண்மையின் நளினங்கள் குறைய வெகுவிரைவில் வந்துவிட்டிருக்கிறது நாட்கள் எல்லாம் உலர்ந்த பழங்களாய் எனக்காகப் பரிமாறப்படுகின்றன எல்லாவற்றிற்குமான தர்க்கம் கருணையின் சாயலை அழித்துவிட்டு கோபக்கனல் தெறிக்கிறது என்னையும் அறியாமல் ஓடும் உதிரத்தோடு வாழ்வின் தேவைக்காய் ஓடிச் சலித்த மனமும் துவண்ட உடலும் மனப்பிறழ்வை பரிசாகத் தந்துவிட்டிருக்கிறது வெளவாலைப் போல் அலைவுறுகிறது மனம் இறுகப் பற்றிக்கொண்டிருக்கும் கரம் ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கிறேன் இருளின் நிழலில் இளைப்பாற
- சசிகலா

பாடல்
இந்த வரிகள் என்னுடையவையல்ல இதன் இசை நான் கோர்த்ததல்ல இந்தக் குரலும் என்னுடையதல்ல இருந்தும் இது நான் கேட்ட பாடல் எனக்கென ஒலிக்கும் பாடல்
- ரா.பிரசன்னா
|