ஆன்லைனில் பசு!



- ரோனி

இனி ராஜஸ்தானில் பசுக்களை வாங்க கம்ப்யூட்டரில் ஜஸ்ட் க்ளிக் செய்தால் போதும். டோர் டெலிவரியாக மாட்டை வாங்கி கட்டி விடலாம்! ராஜஸ்தானின் கால்நடைவளத்துறை ஓஎல்எக்ஸ் போன்ற டிஸைனில் இதற்கான விற்பனை இணையதளத்தை தற்போது உருவாக்கி வருகிறது. இதில் பசுக்களின் போட்டோ, விலை, பசு உரிமையாளர் அட்ரஸ் என சகலமும் இருக்குமாம். கிர், தர்பாகர் மாடுகளுக்கு முன்னுரிமை. 

6 லட்சத்து 60 ஆயிரம் மாடுகளைக் கொண்டுள்ள ராஜஸ்தானில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பசுக்களுக்கு அரசு, தனி ஐடி கொடுத்துள்ளது. ‘‘தரகர்களை ஒழித்து பசுக்களை பாதுகாப்பதோடு, விவசாயிகளின் வருமானத்திற்கும் இத்திட்டம் உதவும்!’’ என்கிறார் கால்நடைத்துறை அமைச்சர் ஒடராம் தேவர்ஷி.