மணல் ஹாஸ்டல்!



- ரோனி

ஆஸ்திரேலியாவில் உலகின் முதல் மணல் ஹாஸ்டலை ‘மேட் மேக்ஸ்’ பட புகழ் டிஸைனர் ஜோன் டூடிங் உருவாக்கியுள்ளார். குர்ரவா பகுதியில் கோல்ட் கோஸ்டில் உருவாகியுள்ள மணல் ஹாஸ்டலில், பார், வாலிபால் விளையாட இடம், டிஜே இசை ஆகிய வசதிகளோடு எட்டு அறைகளும் உண்டு. மொத்தம் 24 டன் மணலில் உருவாக்கப்பட்ட இந்த ஹாஸ்டலில் போட்டிகளில் வெல்லும் 10 லக்கி வின்னர்களுக்கு மட்டுமே அனுமதி. பிரேக்ஃபாஸ்ட், சர்ஃபிங் என அனைத்தும் இலவசமாம்.