செங்கோட்டையில் பிக் பாக்கெட்!



- ரோனி

இந்தியாவில் பிக்பாக்கெட்டுகள் புதுசல்ல. ஆனால், அபேஸ் செய்யும் ஏரியா முக்கியம். போட்டோ எடுத்த ஃபாரீன்காரரிடம் ரூட்டு போட்டு போனை ஆட்டையைப் போட்ட ஹிஸ்டரி பிக்பாக்கெட் நிகழ்வு இது. டெல்லியிலுள்ள ரெட் ஃபோர்ட்டில் தன் ஐபோனில் சில ஜாலி போட்டோக்களை எடுத்துக் கொண்டிருந்தார் உக்ரைன் நாட்டுத் தூதரான இகோர் போலிகா.

சடக்கென ப்ரேமுக்குள் பர்மிஷன் கேட்காமல் நுழைந்த பிக்பாக்கெட் மனிதர், ஐபோனை சடக்கென பாக்கெட் செய்து மின்னலாக மறைந்துவிட்டார். அப்போது இகோரின் செக்யூரிட்டியும் அருகில் இல்லை. ட்ரைவரும் வெளியே காரில் இருந்திருக்கிறார். நாட்டின் முக்கிய ஸ்பாட்டான செங்கோட்டையிலேயே இப்படியா? திருதிருவென முழித்த இகோர், பின் போலீசில் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கிறார். இன்கிரடிபிள் இந்தியா!