புத்திசாலித்தனமா?
- ரீடர்ஸ் வாய்ஸ்
அறிஞர் அண்ணா பர்த்டே சமயத்தில் விஜய் ஆண்டனியின் ‘அண்ணாதுரை’ படச்செய்தி ரொம்ப பொருத்தங்ணா! - த.சத்தியநாராயணன், அயன்புரம்; முரளிதரன், மதுரை; ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; பொன்.கருணாநிதி, பொள்ளாச்சி.
‘ஜிமிக்கி கம்மல்’ சாங் கேட்டு ஆட்டம் போட பெண்குட்டி ஷெரில் இல்லையே சாரே! - ஆசை. மணிமாறன், திருவண்ணாமலை; முரளிதரன், மதுரை; மனோகர், கோவை; அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்; அபிராமி, மோடிகுப்பம்; ராமகண்ணன், திருநெல்வேலி.
சாகச கடல்ராணிகள் பற்றிய செய்தி ஆச்சரியத்தில் எங்களை மூழ்கடித்துவிட்டது. - சத்தியநாராயணன், சென்னை; ஆனி அஞ்சலின், சென்னை; கைவல்லியம், மானகிரி; பூதலிங்கம், நாகர்கோவில்.
வாழ்க்கை நிகழ்வுகளை எதார்த்தமாக எடுத்துக்கொண்ட தேனப்பன் பேட்டி ஜென் கவிதை. - கல்யாணசுந்தரம், அனுப்பானடி; லட்சுமி நாராயணன், வடலூர்; மனோகர், கோவை.
நண்டு புகழ் பழவேற்காடு தன் இயற்கை அழகால் வசீகரித்து விட்டது. - கண்ணன், கரூர்; நவீன்சுந்தர், திருச்சி; சங்கீத சரவணன், மயிலாடுதுறை; குமார், விழுப்புரம்; சண்முகராஜ், சென்னை; இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி; மயிலை கோபி, அசோக்நகர்.
பீகார் சீட்டிங் தேர்வு அதிர்ச்சியளித்தது. இவர்கள் அரசு பதவிக்கு வந்தால் நம் நிலைமை என்னாகும்? - சைமன் தேவா, விநாயகபுரம்.
பெண்கல்வியை ஆதரிக்கும் கர்நாடக அரசின் முயற்சி அருமை. - அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்; ப்ரீத்தி, செங்கல்பட்டு.
கலம்காரி புடவை டிஸைன்களைப் பார்த்ததுமே, தீபாவளிக்கு கலம்காரி ஸாரிதான் எங்கள் சாய்ஸ் என ஃபிக்ஸ் ஆகிட்டோம். - ஜனனி கார்த்திகா, திருவண்ணாமலை; சிம்மவாஹினி, வியாசர்நகர்.
இயற்கை மழையை சேமிக்காமல் செயற்கை மழைக்கு செலவழிப்பது புத்திசாலித்தனமா? - மனோகர், கோவை; சண்முகராஜ், சென்னை; சைமன் தேவா, விநாயகபுரம்.
பைக் சாம்பியன் ரஜினி கிருஷ்ணனின் பேட்டி மின்னல் வேகத்தில் ஈர்த்தது. - அ.முரளிதரன், மதுரை; மயிலை கோபி, அசோக்நகர்.
வெஜ் பேலியோவில் பா.ராகவன் கூறிய பயனுள்ள தகவல்கள் அனைத்தும் பாதுகாக்கப்படவேண்டியவை. - நவீன்சுந்தர், திருச்சி.
ஆல்கஹால் குடிக்கும் காளை விநோத செய்தி - சேவுகப்பெருமாள், பெருமகளூர்.
காற்றின் வேகத்தில் ஒரு பயணம் இன்ட்ரஸ்டிங் செய்தி. - சிம்மவாஹினி, வியாசர்நகர்.
விஷாலின் சவுக்கடி பேச்சில் அரசியல் மசாலா தூக்கல். - பூதலிங்கம், நாகர்கோவில்; அபிராமி, மோடிகுப்பம்.
மூன்றாம் பாலின கீதமான ‘வானம் தாண்டி எல்லை’ பாடலை விழிப்புணர்வாக உருவாக்கியவர்களுக்கு பாராட்டுகள். - டி.எஸ்.தேவா, கதிர்வேடு; அக்ஷயா, திருவண்ணாமலை.
பெண் ரெஃப்ரீயாக முன்னேறியுள்ள பிபியானா பெண்களுக்கு சூப்பர் ரோல்மாடல்தான். - அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.
|