பார்மஸியில் கஞ்சா விற்கும் நாடு!
தொகுப்பு: ரோனி
தென் அமெரிக்க நாடான உருகுவேதான் பிரபஞ்சத்திலேயே முதல் நாடாக கஞ்சாவை பார்மஸிகளில் விற்க அனுமதித்துள்ளது. 2013ம் ஆண்டு கஞ்சா பயிரிடவும், விற்கவுமான மசோதா தயாரானாலும் உடனே அமலுக்கு வரவில்லை. இப்போது அங்கு பார்மஸிகளில் விற்கப்படும் கஞ்சாவை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், தங்களுடைய கைரேகையை பதிந்து மாதத்துக்கு 40 கிராம் வரை பெறலாம்.
 அரசின் இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து இன்றுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ரெஜிஸ்டர் செய்து க்யூ கட்டி நிற்கிறார்கள். இன்று அங்கு வளர்ந்து வரும் தொழில் கஞ்சா பயிரிடுவதுதானாம். ஒரு கிராம் கஞ்சாவின் விலை 1.30 டாலர். உருகுவே புகைக்கிறது!
|