புடவை அபேஸ்!



தன் அதிலோக சுந்தரி மனைவிக்காக இந்த கணவர் செய்ததுதான் டாக் ஆஃப் த கன்ட்ரி! சத்தீஸ்கரின் பிலாஸ்பூரைச் சேர்ந்த காந்த் குப்தா, தன் மனைவி பிரமிளா மீது டன் கணக்கில் பாசம் கொண்ட கணவர். பிலாஸ்பூரில் நடந்த சாவன் சுந்தரி என்ற லோக்கல் அழகிப்போட்டிக்கு பிரமிளா பெயர் கொடுத்துவிட்டார்.

மனைவி கண்ணுக்கு லட்சணமாக நின்றால்தானே தனக்கு கௌரவம் என்று நினைத்த காந்த், டிசைனர் கடை ஒன்றுக்கு ஜெட் வேகத்தில் பறந்தார். ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள ஆடைகளை டக்கென அபேஸ் செய்தவர், அதனை தன் மனைவிக்கு அணிவித்து அழகுபார்த்ததோடு நின்றிருக்கலாம். மாறாக அழகிப்போட்டியில் ராம்ப் வாக் செல்ல அந்த திருட்டு புடவையைக் கட்டிவிட்டதுதான் வினையானது. விழாவில் புடவையைப் பார்த்து ஒருவர் போலீசுக்கு தகவல் கொடுக்க... இப்போது ஸ்ரீகாந்த் மாமியார் வீட்டில் கம்பி எண்ணுகிறார்!