சபாஷ் எம்எல்ஏ!
எம்எல்ஏ ஆகி காரில் ஏறி ஏசி போட்டவுடன் மக்களை மறந்தவர்கள், அடுத்த எலக்ஷனுக்குத்தான் மண்ணில் கால் வைப்பார்கள். இந்நிலையில் தன் மீட்டிங்கை கூட தள்ளி வைத்து விட்டு விபத்துக்குள்ளானவர்களைக் காப்பாற்றிய எம்எல்ஏ இந்தியாவுக்கே புதுசல்லவா?! உத்தரப்பிரதேசத்தின் சதார் தொகுதியைச் சேர்ந்த விபின்குமார் டேவிட்தான் அந்த அபூர்வ எம்எல்ஏ. லக்னோ - ஆக்ரா எக்ஸ்பிரஸ் வே-யில் மீட்டிங் ஒன்றுக்கு சென்றுகொண்டிருந்தபோது அந்த சம்பவம் நடந்தது.
 அலியார்பூர் பில்கானா கிராமத்தினருகில் கார் ஒன்று விபத்தாகி, அதில் பயணித்த ஐந்து பேரும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்கள். உடனே தன் வாகனத்தை விட்டு இறங்கி அவர்களுக்கு முதலுதவி அளித்து அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்து உயிரைக் காப்பாற்றியிருக்கிறார். விபத்துக்குள்ளான ஐந்து பேரும் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் ஹைலைட்!
|