திருமண மோசடி!



போனில் ஏடிஎம் பின் நம்பர் கேட்பது, பேங்க் அக்கவுண்ட் பாஸ்வேர்ட் திருடுவது என க்ரைம்கள் அனைத்தும் டிஜிட்டலானாலும் திருமண ஆசை காட்டி டிமிக்கி கொடுப்பது மட்டும் இந்தியாவின் எவர்கிரீன் தனித்துவமாகத் திகழ்கிறது! மும்பையைச் சேர்ந்த ஒரு பெண்இந்த ஸ்பைடர் சதிவலையில் சிக்கி தன் கைக்காசை இழந்திருக்கிறார். மும்பையின் சிவாஜி பார்க்கைச் சேர்ந்த பெண்மணிக்கு, மேரேஜ் ஆசை எட்டிப் பார்க்க, உடனே வெப்சைட்டில் தன் விவரங்களை பதிவு செய்தார்.

கிடைத்த பதிலில் இங்கிலாந்தைச் சேர்ந்த அமர்ஜோஷி, அம்மணியின் மனதைக் கவர, போன் நம்பர் பரிமாற்றம் வரை நிகழ்ந்தது. பெண்ணைச் சந்திக்க மும்பை வருவதாகக் கூறிய ஜோஷியின் பேச்சை நம்பி ஏர்போர்ட் வந்த பெண்ணிடம், கஸ்டம்ஸில் டேக்ஸ் எனச் சொல்லி, லம்ப்பாக ரூ.74 லட்சத்தை பிடுங்கிவிட்டார் அசகாய ஜோஷி. இப்போது ஜோஷியைத் தேடி வருகிறார் மும்பை பெண்மணி.