சொத்தையா



- ஜி.தமிழினியன்

சொத்தையாவுக்கு எப்போது இந்தக் குறை வந்தது? தெரியவில்லை. அதைக் கண்டுபிடிக்க டி.நாராயண ரெட்டியாலும் முடியாது. அவன் ‘அப்படி’ என்று வெளியுலகத்துக்குத் தெரியாமலிருக்க கட்டை மீசை வைத்திருந்தான். எவரும் அவன் கெத்தாக ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 ஓட்டுவதைப் பார்த்தும் பொறாமைப் பட்டதில்லை. உறுதியாகத் தெரியும் ‘கன்னிப் பருவத்திலே’ மாடும் முட்டிவிடவில்லை. ஆனாலும் அந்தக் குறை வந்துவிட்டது.

மும்பை பெண்ணை விர்ச்சுவலாக கற்பழித்த தமிழக வாலிபர் கைதாவாரா? திருப்பூர், ஆக. 21: மும்பை பெண்ணை விர்ச்சுவலாக கற்பழித்த வாலிபரைத் தேடி நாளை தமிழகம் வரும் மும்பை போலீஸ் அவரைக் கைது செய்து விசாரிக்கப் போவதாகத் தெரிவித்தனர். முகநூல் திருப்பூர் அவிநாசி ரோடு கம்பன் நகரில் வசித்து வருபவர் சொத்தையா (வயது 23).

பொறியியல் பட்டதாரியான இவர் பொழுதுபோக்காக முகநூலில் ரம்யா பொன்னுச்சாமி என்ற நம்பத்தகுந்த பெயரில் இளம்பெண்ணின் புகைப்படத்துடன் அக்கவுண்ட் ஆரம்பித்து பெண்களுடன் (245 பெண் நண்பர்கள் உள்ளனர்) சாட் செய்து வந்துள்ளார். நாளடைவில் அதில் இரவு பகல் தெரியாமல் சைபர் க்ரைமில் ஈடுபட ஆரம்பித்து அவரின் இயலாமையை அங்கு இல்லாமை ஆக்கியுள்ளார்.

சமீபத்தில் அவர் தனது மடிக்கணினி கேமரா வேலை செய்யவில்லை என்று பொய் சொல்லி மேலும் பேச்சால் மயக்கி வெப் கேமரா மூலம் இன்பம் அனுபவித்த மும்பை பெண் தீப்தி வர்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அளித்த புகாரையடுத்து அவரைக் கைது செய்ய நாளை தமிழகம் வருகை புரிகிறார்கள். அக்கா வீரக்குமாரி அவருடைய அக்கா வீரக்குமாரியிடம் பேசியதில், ‘சொத்தையா ட்ரீட் கொடுப்பான்.

டேட்டிங் செல்வான். மற்றபடி ஒரு தடவை கெளரினு ஒரு பெண்ணை டேட்டிங் கூட்டிச் சென்று அங்கே ஏற்பட்ட விரக்தியில் அவளுடன் அந்தரங்கமாகப் பேசிய ஆடியோ பதிவுகளை நெட்டில் லீக் செய்தான். ஆனால், அதை ரெண்டு நாளில் டெலீட் பண்ணிவிட்டான். அதற்கப்பறம் அவன் மிகுந்த மனஉளைச்சலில் இருந்தான்’ என்றார்.

சித்த வைத்தியர் தர்மராஜ் எனும் சித்த வைத்தியரின் அதர்ம வழிகாட்டுதலால் கிடைத்த அலைபேசி எண்களில் காதல் தேடல்களை ஆரம்பித்ததாகச் சொல்லும் சொத்தையா தனது தாழ்வு மனப்பான்மையை விஸ்கியில் போட்ட ஐஸ் கட்டி போல் கரைத்துள்ளார். வாட்ஸ் அப்பில் ஆபாச மெசேஜ் அனுப்புவது, நேரங்கெட்ட நேரத்தில் வீடியோ காலிங் பண்ணுவது, நடிகைகள் குளிப்பதை அனுப்புவது என்று மெல்ல ஒரு 24/7 பொம்பளை பொறுக்கியாகியுள்ளார்.

முன்ஜாமீன் சித்த வைத்தியரைச் சந்தித்த பின்தான் தனக்கு இப்பழக்கம் வந்துவிட்டதாகத் தெரிவித்து மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டிருக்கும் மனு மீது இன்று மாலை தீர்ப்பு வருகிறது. ‘தின சூரியன்’ பேப்பரில் அன்றைய செய்தியைப் படித்தபின் யோசனையில் ஆழ்ந்தார் தர்மராஜ். சில மாதங்களுக்கு முன்: தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சித்த வைத்திய தன்வந்திரி தர்மராஜின் விளம்பர நிகழ்ச்சியை சொத்தையா பார்த்துக் கொண்டிருந்த போது அவனுடைய அக்கா வீரக்குமாரி பார்த்துவிட்டாள்.

‘‘காலைல எந்திரிச்சி வாய் கூட கொப்பளிக்கல... இந்த கருமத்த எதுக்கு தென‌மும் பாத்துட்டிருக்க?’’ ‘‘இது கருமம்னு உனக்கு எப்படிக்கா தெரியும்?’’ சமாளித்து படுக்கையிலிருந்து தீர்மானத்துடன் எழுந்தான். அவன் ஊரான திருப்பூரிலேயே தர்மராஜின் விஜயம் இருந்தாலும், ‘எவனாவது பார்த்தால் சங்கடம்’ என்று திண்டுக்கல் விஜயத்திற்காகக் காத்திருந்து 6ம் தேதி ஹோட்டல் குறிஞ்சிக்கு சென்றான்.

அங்கு அவன் வயதைச் சேர்ந்தவர்கள் யாருமில்லை. ஒருவன் முகத்தை கர்ச்சீப்பால் மூடிக்கொண்டிருந்தான். சிலருக்கு வியர்த்திருந்தது. வந்தவர்களில் பாதிப் பேருக்கு முன் வழுக்கை. எல்லாரையும் போல இவனும் திண்டுக்கல்லுக்கு வேறு வேலைக்காக வந்து ரூம் போட்டிருப்பது போல வில்ஸ் மைல்ட்ஸ் புகைத்தவாறே நடந்து கொண்டிருந்தான்.

இவன் டோக்கன் நம்பரை அழைத்தபின் சிகரெட்டை அணைத்துவிட்டு உள் சென்றதும், ஒரு நிபுணருக்கான வழுக்கை, நெற்றியில் விபூதி, அதன்கீழ் குங்குமம் வைத்த சிரித்த முகத்துடன் தர்மராஜ் அமர்ந்திருந்தார். பசுமை FMல் பாடல் யாருக்கோ டெடிக்கேட் ஆகிக் கொண்டிருக்க அதன் வால்யூமைக் குறைத்துவிட்டு அப்பாவின் டையிங் யூனிட்ஸ், ஆவ்டி TT மைலேஜ் வரை தகவல் சேகரித்து சூழ்நிலையை இயல்பாக மாற்றிவிட்டு தர்மராஜ் விஷயத்துக்கு வந்தார்.

‘‘சொல்லுங்க தம்பி... என்ன ப்ராப்ளம்?’’ அமைதி. ‘‘கல்யாண பயமா?’’ மீண்டும் அமைதி. ‘‘ஏதாவது தப்பான சிநேகிதமா?’’ ‘‘இல்ல சார்...’’  ‘‘தூக்கத்தில ஸ்கலிதமா? என்ன உன் ஃப்ரெண்டா நினைங்க தம்பி...’’ அமைதியை மெதுவாக உடைத்தவன் ரத்தப் பரிசோதனை, டி‍-செல் எண்ணிக்கைகளில் எந்த பாதிப்பும் இல்லை என்று எதையோ ஆரம்பித்து அவனின் பிரச்னையைப் பற்றிய குறிப்பைக் கொடுத்தான்.

‘‘அட இவ்வளவுதானா... இதெல்லாம் மனசு செய்யும் சித்து வேலை. உங்களுக்கு... உனக்கு ரெண்டு மருந்து தரணும். ஒண்ணு மனசுக்கு. இன்னொண்ணு உடம்புக்கு...’’ ‘‘மனசுக்கு மருந்தா சார்?’’ ‘‘ஆமா! நீ சைட் அடிக்கிற பொண்ணுங்க கிட்ட எல்லாம் பேசு, மொபைல் நம்பர் வாங்கு. அதான் இப்ப வாட்ஸ்‍‍அப், வைபர்னு நிறைய இருக்கே... அதுல ‘ஹாய்’னு ஆரம்பிச்சு அடுத்த நாள் ‘டார்லிங்’னு போயிரு.

கூச்சப்படாத! ரெண்டு மூணு பொண்ணு செட் ஆனாலும் தயங்காத. அதான் மணக்க மணக்க மல்லிகப்பூ வாசத்தில கிடைக்குதே... அப்ப‌றம் முக்கியமான சமாச்சாரம்... கொஞ்ச நாள் பிட்டு படம் பக்கமே தல வைக்காத‌!’’ சின்ன கம்பியை கொடுத்தால் ஈஃபிள் டவர் கட்றவன். தான், சொத்தையா இருந்தும் முகத்தில் தயக்கத்தைக் காட்டினான். ‘‘என்னாச்சுப்பா?’’ ‘‘ஃபாரின் முஸ்லி பவர் எல்லாம் ட்ரை பண்ணிட்டேன் சார்... வேஸ்ட்!’’ ‘‘அடுத்து உடம்புக்கு தான்...’’ என்று சூப்பர் ஸ்பெஷல் செட்டை ஒரு மண்டலம் சாப்பிடத் தந்தார்.

“சிட்டுக் குருவி படம் போட்ட லேகியத்தை காலையில வெறும் வயித்தில ரெண்டு ஸ்பூன் சாப்பிட்டு அரை மணி நேரத்துக்கு தண்ணி கூட குடிக்காத... அப்பறம் அந்த நீல நிற மாத்திரையும் பச்சை நிற மாத்திரையும் சாப்பிட்ட பின்னாடி காலையும் நைட்டும் எடுத்துக்க... 2 கேப்சூல்ஸும் மதியம் சாப்பிட்ட பின்‌னாடி.. புரியலைனா திரும்ப கேளுப்பா!” ‘‘மனப்பாடமே ஆகிடுச்சு சார். வந்து... சரி ஆயிரும்ல? உங்களைத்தான் மலைபோல நம்பி வந்திருக்கேன்...’’ ‘‘ஆறு மாசத்தில நீ XXXல நடிக்கிற அளவுக்கு தகுதி ஆகிடுவ..!’’

நம்பிக்கையுடன் பத்து இரண்டாயிரம் ரூபாய் தாள்களை பீஸாகக் கட்டிவிட்டு திருப்பூர் திரும்பினான் சொத்தையா. ‘ரம்யா பொன்னுச்சாமி’ (tagged) இந்த ஃபேக் ஐடியில் பெண்களைச் சீரழித்த சொத்தையா போன்ற எச்சைங்க எல்லா இடத்திலும் இருக்காங்க. இருப்பாங்க... அதனால் மகளிர்களே, நீங்க ஜாக்கிரதையாக இருக்க வேண்டிக் கொள்கிறேன்...’ - என்ற ஸ்டேட்டஸை டாக்டர் தர்மராஜ் தர்மக்குமார் தன்னுடைய டைம் லைனில் பதிவு செய்து அதற்கு 78 லைக்ஸும் 16 கமெண்ட்ஸும் வாங்கியிருந்தார்.  

புகார்!

ஃப்ளோரிடாவின் ஓகலூசா கவுன்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த டேவிட் பிளாக்மோன் என்பவர், தன் காரில் திருடு போன பொருள் குறித்து புகார் கொடுத்தார். உடனே போலீசார் அவரை அரஸ்ட் செய்து லாக்கப்பில் தள்ளிவிட்டனர். காரணம், காரிலிருந்த கோகைன் போதைப் பொருளைக் காணவில்லை என்று அவர் புகார் கொடுத்ததுதான்!

குரங்கு விளையாட்டு!

ஆப்பிரிக்காவின் ஸாம்பியாவில் திடீரென 50 ஆயிரம் வீடுகளுக்கு பவர்கட். ‘கரண்டை போடுங்க சார்’ என மின்வாரி யத்துக்கு போன் செய்தால், ‘குரங்கை ஹாஸ்பிடல் அனுப்பியிருக்கிறோம்!’ என்று பதில். என்ன ஆச்சு? பபூன் குரங்கு மின்வாரியத்தின் ஒயர்களைப் பிடுங்கி எறிந்து விளையாடியதால் ஏற்பட்ட வினைதான் கரண்ட் கட். சரி, விளையாடிய குரங்கு? போனில் மின்வாரியம் சொன்ன பதில்தான்!

வேலை செய்யும்போது ஹெல்மெட்!

வண்டி ஓட்டும்போது ஹெல்மெட் ஓகே. ஆபீசில் வேலை செய்யும்போது எதற்கு ஹெல்மெட்? பீகாரின் பத்திரப்பதிவு அலுவலகம் ஒன்றில்தான் அத்தனை ஆபீசர்களும் ஹெல்மெட் போட்டு வேலை செய்கின்றனர். காரணம், அலுவலகத்தின் சீலிங் உடைந்து தண்ணீர் மழைச்சாரல்களாக தலைமீது கொட்டுகிறதாம்!