Mr.கொரில்லா



-த.சக்திவேல்

சிக்னல் போடாமலேயே லண்டன் சாலையில் அனைத்து வாகனங்களும் சட்டென்று நின்றன. எல்லோரின் பார்வையும் வியப்புடன் மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்ட கொரில்லாவின் மீது திரும்புகிறது. லண்டன் வாசியான டாம் ஹாரிசன் காவல்துறையில் உயர் பதவி வகிப்பவர். விலங்குகளின் மீது தீராத நேசம் கொண்டவர். அழிந்து வரும் கொரில்லா இனத்தைப் பாதுகாக்க மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருபவர்.

அதன் ஒருபகுதியாக கொரில்லா மாதிரியே வேடமிட்டு மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டிருக்கிறார். போட்டி தூரமான 26.2 மைல்களை கொரில்லா போல தவழ்ந்தே கடந்திருக்கிறார். இந்த மைல் கல்லை அடைய அவருக்கு ஆறு நாட்கள் ஆனது. தினமும் 4.5 மைல் தூரம்தான் அவரால் கடக்க முடிந்திருக்கிறது. இதற்கே 10 மணி நேரம் தேவைப்பட்டதாம். இரவு நேரத்தில் நண்பர்களின் வீட்டில் ஓய்வெடுத்திருக்கிறார். இந்தப் போட்டியில் கலந்து கொண்டு போட்டி தூரத்தை எட்டியதற்காக அவருக்கு 33,650 டாலர் கிடைத்திருக்கிறது. இந்தத் தொகையை கொரில்லா அமைப்புக்காக கொடுக்கப்போகும் அவருக்கு ஒரு சல்யூட்!