மனித பார்பி!



-த.சக்திவேல்

பார்பி பொம்மையைப் போன்ற உடலும், அழகும் சாத்தியமா? ‘‘ஆம்’’ என்கிறார் ஒபீலியா. கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ஒபீலியா, குழந்தைப்பருவத்தில் இருந்தே தன்னை ஒரு பார்பி பொம்மையாகவே நினைத்து கனவுலகில் வாழ்ந்து வந்திருக்கிறார். குடும்பம், நண்பர்கள், காதலனைவிட அதிக நேரம் அவர் வாழ்ந்தது பார்பியுடன்தான்.

முப்பது வயதாகியும் அந்த கனவுலகில் இருந்து அவரால் விடுபட முடியவில்லை. தினமும் மூன்று மணிநேரம் பார்பி பொம்மையைப் போல மேக்கப் போட்டுவிட்டுத்தான் வீட்டை விட்டே வெளியே கிளம்புவார். கண்கள், முகம், உடல், கால்கள் என உடலின் அனைத்துப் பகுதிகளையும் அறுவை சிகிச்சை செய்து பார்பி பொம்மையைப் போலவே இப்போது மாறிவிட்டார். இன்னும் தத்ரூபமாக தோற்றம் இருக்க வேண்டும் என்பதற்காக விரைவில் தனது விலா எலும்புகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப் போகிறார். இதற்கெல்லாம் ஆன செலவு ஜஸ்ட் ரூ.25 லட்சம்தான்!