ஃப்ரெண்ட்ஸ்



-த.சக்திவேல்

காதலியைப் பார்க்க ஏழு கடல், ஏழு மலை தாண்டி காதலன் வந்த கதைகளைக் கேட்டிருப்போம். இதுபோல் நண்பர்களுக்காக யாரேனும் வருவார்களா? ஃபிலிப்பன் வருகிறார். அதுவும் ஏழு கடல், ஏழு மலை, ஏழு காடுகளைத் தாண்டி தினமும் இரண்டு முறை வருகிறார். நார்வேயின் மலைப்பகுதியில் வசித்து வரும் மெட்டேவுக்கு வயது 81. அவரது கணவர் சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். வாரிசு இல்லை.

இந்தச் சூழலில் மூன்று வருடங்களுக்கு முன் ஃபிலிப்பனை தன் வீட்டுக்கு அருகில் பார்த்திருக்கிறார் மெட்டே. தன் கையில் வைத்திருந்த ஆப்பிளைத் தர, மறுப்பேதும் தெரிவிக்காமல் ஃபிலிப்பன் அதை வாங்கிக்கொள்ள... இருவருக்கும் இடையில் நட்பு மலர்ந்திருக்கிறது. அடுத்த நாளிலிருந்து தினந்தோறும் மெட்டேவின் வீட்டைத் தேடி காலையிலும், மாலையிலும் ஃபிலிப்பன் வந்துவிடுகிறார். மெட்டேவும் சலிக்காமல் ஃபிலிப்பனுக்கு உணவளித்து நட்புக்கே புதிய இலக்கணத்தைப் படைக்கிறார். ஆம்; ஃபிலிப்பன் மனிதன் அல்ல. காட்டு மான்!