ரீடர்ஸ் வாய்ஸ்



ஸ்வீட் வாய்ஸ் குரல்களின் அறிமுகம் எக்சலண்ட்! புதுப்பாடகிகளை பார்க்கும்போது ரவுண்ட் அடித்து வருவார்கள் எனத் தோன்றுகிறது. ஹிட் பாடல்களை நமக்காக இசைத்த ஸ்வீட் வாய்ஸ் குரல்களுக்கு நாங்களும் அழகிய பூங்கொத்து தருகிறோம்
- இரா. வளையாபதி, தோட்டக்குறிச்சி. மயிலை கோபி, சென்னை - 78.

ஒவ்வொருவர் வாழ்க்கையின் பின்னேயும் உள்ள பெண் என்ற பொன்மொழியின் இலக்கணமாக விஜயலட்சுமி தைரியலட்சுமியாக மிளிர்கிறார். கஸ்தூரி ராஜாவின் அடையாளம் வெளியே தெரிய உதவிய விஜயலட்சுமி அவர்களின் பங்கு பற்றிய கட்டுரை அருமை.
- கோபு கண்ணன், விழுப்புரம். என்.கோபால், நங்கநல்லூர்.

காய்கறிகளும் மனிதர்களும் நிறைந்த புது உலகை அறிமுகம் செய்த கோயம்பேடு காய்கறி மார்க்கெட் செல்ல மனம் ஏங்குகிறது. ஆசியாவின் மிகப்பெரிய காய்கறி மார்க்கெட் என்பதை கட்டுரை விரிவாக பறைசாற்றியது.
- கோபு கண்ணன், விழுப்புரம். ராமகண்ணன், திருநெல்வேலி.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை முழுவதுமாக புரிந்துகொள்ளும்படி அதன் வரலாற்றை வரையறுத்து விட்டீர்களே! துல்லியமான வரலாற்றுப் பதிவு. இவ்விளையாட்டை கொச்சைப்படுத்திய ‘பீட்டா’வுக்கு இக்கதையை சத்தமாக ஒலிபரப்ப வேண்டும்! தமிழர்களின் உரிமையின் பெருமையை அலங்காநல்லூரின் கதையாக அளித்ததற்கு நன்றிகள் பல.
- ஏ.எஸ். நடராஜன், சிதம்பரம். மனோகர், கோவை. கே.எஸ்.குமார், விழுப்புரம்.

அதிரடி ஆணைகளை அறிவித்து கதிகலங்க வைக்கும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியாவோடு நட்புறவு பாராட்டுவதாக கூறியது அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கும், நமக்கும் கௌரவம் மட்டுமல்ல பாதுகாப்பும் கூட. வெள்ளை மாளிகையில் சமஸ்கிருதம் ஒலிக்க வைத்த ட்ரம்ப், அமெரிக்காவின் மோடி எனலாம்.
- மே.பா. மனோகர், கோவை - 14. த.சத்தியநாராயணன், சென்னை - 72.

ரோட்டோர கடை உணவுகளால் உடல்நலனை கெடுத்துக் கொள்ளாமல் சுதாரிப்பாக அம்மாவிடமே சமையலின் அரிச்சுவடியைக் கற்றுக்கொள்ள வேண்டியது ஆண்களுக்கு காலத்தின் கட்டாயம் என்பதை உயிரமுது உணர்த்தியது.
- எஸ். பூதலிங்கம், நாகர்கோவில் - 1.

டாக்டர் கு. கணேசனின் 2nd ஒப்பீனியன் நோய்களின் அச்சம் போக்கும் நம்பிக்கைத் தொடர். வரும் ஆண்டில் ‘சூரியன் பதிப்பக’த்தின் நெ.1 பெஸ்ட் செல்லர் இதுதான்.
- சிவமைந்தன், சென்னை - 78.

ஜேனின் தன்னம்பிக்கை தனித்தன்மையுடன் மிளிர்ந்த கதையைப் படித்ததும், மனது வைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை உணர்ந்தேன்.
- ஏ.எஸ். நடராஜன், சிதம்பரம்.

மும்பை யானைகள் காப்பகம், யானைகளுக்கு ஸ்வெட்டர் தைத்துக் கொடுக்க நிச்சயம் யானையளவு மனசு வேண்டும்தான்.
- மேட்டுப்பாளையம் மனோகர், கோவை - 14.

க்ரீன்பீஸ் பிரியாபிள்ளையின் மக்கள் போராட்டம் அசத்தியது.
- சந்தானகோபால கிருஷ்ணன், சென்னை - 4.