Jokes



‘‘போஸ்டர் அடிச்சு ஒட்டினதுக்கு என்னை அடிச்சுட்டாங்கப்பா..!’’
‘‘பின்ன... ‘கயவர்களிடம் இருந்து கழகத்தை மீட்டு ‘தீபா’ராதனை காட்டு’னு போஸ்டர்ல போட்டா..!’’
- பாலா சரவணன், சென்னை - 128.

‘‘மெத்தை கம்பெனி ஓனர் பொண்ணை கட்டிக்கிட்டியே... ஆளு எப்படி?’’
‘‘‘படு’த்தறா!’’
- வி.சகிதா முருகன், தூத்துக்குடி.

‘‘தலைவர் ஏன் மேலிடத்துக்கு விசுவாசமா இருக்காரு?’’
‘‘இல்லைனா சுவாசம் போயிடுமே!’’
- பா.ஜெயக்குமார், வந்தவாசி.

‘‘பொண்ணுக்கு கராத்தே, குங்ஃபூ எல்லாம் தெரியும்... வேறென்ன எதிர்பார்க்கறீங்க?’’
‘‘பையனுக்கு இன்சூரன்ஸ் பாலிஸி!’’
- எஸ்.ராமன், சென்னை.

‘‘மாப்பிள்ளை கைல மொய் கவரை கொடுத்தவங்களை ஏன் அடிக்கறாங்க?’’
‘‘‘உண்மையான தமிழனா இருந்தா ஷேர் செய்யவும்’னு அதுல எழுதி
இருக்காராம்!’’
- சரவணன், கொளக்குடி.

‘‘ஏன்டா... மார்ச்சுவரிலதான் அவர் போலி டாக்டர்னு தெரிஞ்சுதா..?’’
‘‘ஆமா. ‘பேஷன்ட் கண் விழிச்சதும் என்னை கூப்பிடுங்க’னு அப்பதான் சொன்னார்!’’
- பர்வீன் யூனுஸ், ஈரோடு - 9.

‘‘எதுக்கு உன் பையனை போட்டு இந்த அடி அடிக்கற..?’’
‘‘வேறென்ன செய்யச் சொல்ற?
என் ஃப்ரெண்ட்ஸ் முன்னாடி என்னை வெறுப்பேத்த ‘சின்னம்மா’னு கூப்பிடறானே!’’
- அஜித், சென்னை - 126.

‘‘ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு என்ன படம் காட்டறாங்க?’’
‘‘எனக்கு வாய்த்த அடிமைகள்!’’
- சம்பத்குமாரி, பொன்மலை.