BARாட்டுகள்!



ரீடர்ஸ் வாய்ஸ்

‘BARாளுமன்றம்’ செம கலக்கல் காக்டெய்லாக இருந்ததற்கு இதோ எங்கள் BARாராட்டுகள்.
- ஆர்.சண்முகராஜ், திருவொற்றியூர்.

10 ரூபாய் சோப்பும் ஆண்மையை குறைக்குதுன்னு கொளுத்திப் போட்டா இனி வைக்கோலை தேய்ச்சித்தான் குளிக்கணும் போலிருக்கு!
- த.சத்தியநாராயணன், சென்னை - 72.

இலக்கிய பேச்சுகளை இன்டர்வெல் இல்லாமல் கேட்க உதவும் ‘ஸ்‌ருதி டிவி’ முயற்சி ஆசம்ஜி.
- ஆர்.இளமாறன், திருச்சி.

நவீன வாழ்வை லேசராக ஊடுருவும் இன்டர்நெட்டின் பிளஸ் மைனஸ் அலசல் ஹெச்டி துல்லியம்.
- கு.நா.சிவகுமார், சென்னை - 78.

‘ஊஞ்சல் தேநீரி’ல் யுகபாரதி கூறிய எளிமையும் சாந்தமுமான நாகூர் சலீம் அய்யா, எளிதாக மறந்து போனது, சாசுவதமானது ஏதுமில்லை என்பதற்கான சாட்சி.
- கே.மணிவண்ணன், கோவை.

‘பாட்டனி துணி’ அட்டகாச டிசைனில் மனம் கவர்ந்தது.
- ஆர்.டி.ரெஜினாபானு, வேலூர்.

நிலப்பரப்பின் முகங்களா, மனிதர்களின் முகங்களா என இரண்டையும் பக்குவமாக பேசி இந்தியா முழுக்க கைப்பிடித்து கூட்டிச்சென்ற ஜெயமோகனுக்கு வாழ்த்துகள்.
- டி.துரைசாமி, ஈரோடு.

டென்மார்க் தமிழச்சி அர்ச்சனாவின் சின்சியர் போராட்டம் உற்சாக பூஸ்டர்.
- ஜி.பூங்கொடி, காரமடை.

சென்டர் பேஜ் கிருத்திகாவின் கோக்கு மாக்கு ஸ்டில்கள் ஏகபோக கிளாமர் மப்பு.
- எஸ்.ஆர்.ராமநாதன், சென்னை - 40.

‘தமிழ்நாட்டு நீதிமான்கள்’ தொடரில், சுயமரியாதைக்கு சான்றாக டி.ரங்காச்சாரியாரின் வரலாறு, தனித்துவமான கல்வெட்டு சொற்களாக நெஞ்சில் நிறைந்தன.
- பி.ரங்கநாதன், கும்பகோணம்.

துவைக்காத ஜீன்ஸில் இத்தனை வகையா? பக்கா எரோடிக் ஸ்டில்களில் குங்குமம் நியூவெர்ஷன் மிரட்டுது பாஸ்!
- சி.எம்.கார்த்திகா, திருவண்ணாமலை.

‘நட்புமொழி’ இனிய நட்பின் இனிய சர்ப்ரைஸ் கணங்களை நெஞ்சில் ரிமைண்டர் செய்து நிறைவு பெற்றது மகிழ்ச்சி.
- எம்.முருகேசன், திண்டுக்கல்.