105 வயது சாதனையாளர்!



-த.சக்திவேல்

நூறு வயதைத் தாண்டியவரால் வேகமாக சைக்கிள் ஓட்ட முடியுமா? கடந்த வாரத்தில் பிரான்ஸை சேர்ந்த ராபர்ட் மர்சண்ட் தனது 105 வயதில் மணிக்கு 14 மைல் வேகத்தில் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளார். ‘‘நூத்து அஞ்சு வயசு கிழவனாலும் வேகமா சைக்கிள் ஓட்ட முடியும்னு உலகத்துக்கு காட்டத்தான் இப்படி செஞ்சேன். என் சாதனையை பார்க்க இத்தனை பேர் வருவாங்கன்னு நினைச்சுக் கூட பார்க்கலை...’’ நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் ராபர்ட்.

ஒரு விளையாட்டு அரங்கத்தில்தான் இவரது இந்த சாதனை நடந்தது. பெடலை ராபர்ட் அழுத்த ஆரம்பித்தபோது எழுந்த கைதட்டலும், விசிலும், ‘கமான் ராபர்ட்...’ என்ற உற்சாகக் குரலும், கேமரா கிளிக்கும் கடைசிவரை தொடர்ந்தது. இதற்குமுன் 100 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான சைக்கிள் பந்தயத்தில் மணிக்கு 17 மைல் வேகத்தில் ஓட்டியதே உலக சாதனையாக இருந்தது. இதை நிகழ்த்தியவரும் இதே ராபர்ட்தான்! அப்போது இவருக்கு வயது 102!