கலி முத்திடுத்து‘‘என் உசுருனா அது ஹார்வியும், லோலாவும்தான். நாங்க மூணுபேரும் ஒண்ணாத்தான் தூங்குவோம். ஒண்ணாத்தான் சாப்பிடுவோம்...’’ என்கிற விக்கி ஜோஸுக்கு 26 வயது. இங்கிலாந்தின் நியூ கேஸல் சிட்டியில் வசிக்கிறார்.

மெய்மறந்து இவர் குறிப்பிடும் ஹார்வியும், லோலாவும் மனிதர்கள் அல்ல. நாய்க்குட்டிகள். மாதம்தோறும் இவர்களுக்காக பத்தாயிரம் ரூபாய் வரை செலவு செய்கிறார். விஷயம் இதுவல்ல. கடந்த கிறிஸ்துமஸுக்கு மட்டும் இவர்கள் இருவருக்கும் கிஃப்ட், டிரஸ், விதவிதமான உணவு, பொம்மை, ஹேர்கட் என குத்து மதிப்பாக ஒரு லட்சம் ரூபாய் வரை செலவழித்திருக்கிறாரே... அது மேட்டர்.

இந்த செய்தியும், புது டிரெஸ்ஸுடன் நாய்கள் காட்சி தரும் படங்களும்தான் இப்போதைய வைரல். ‘‘என்னை பைத்தியம்னு சொல்றாங்க. ப்ளடி ஃபூல்ஸ். ஹார்வியும் லோலாவும் பெட் அனிமல்ஸ் இல்ல... மை பெஸ்ட் ஃபிரெண்ட்ஸ். இதை முதல்ல புரிஞ்சுக்குங்க...’’ சவுண்ட் விடுகிறார் விக்கி. யாரை நோக்கி? தனது பாய் ஃபிரெண்ட்ஸைப் பார்த்து. ஏனெனில் தன் ஆண் நண்பர்களுக்காக ஒரு யூரோ கூட விக்கி செலவு செய்ய மாட்டாராம். மாறாக நூற்றுக்கணக்கான யூரோவை தனக்காக அவர்கள் செலவு செய்யும்படி கட்டாயப்படுத்துவாராம்!   
                                          

-த.சக்திவேல்