இதுக்கு நாங்க சிரிக்கணுமா?‘‘ஏன்யா... நேத்து திருடன் வந்தப்ப நீ முழிச்சுட்டுத்தானே இருந்த... ஏன் சத்தம் போடலை?’’
‘‘வேண்டாம் மாட்டிக்குவோம்னு வேலைக்காரி சொன்னா ஏட்டய்யா!’’
- எஸ்.எலிசபெத் ராணி, மதுரை - 18.

‘‘நான் குடிச்சிருக்கேன்னு எப்படி கண்டுபிடிச்ச?’’
‘‘நீ எடுத்த செல்ஃபி நல்லா இருக்கே!’’
- சரவணன், கொளக்குடி.

‘‘என்ன... தூது வந்த புறா நம் அரணமனையிலேயே தங்கிவிட்டதா?’’
‘‘ஆம் மன்னா! நீங்கள் வளர்க்கும் புறாவுடன் ‘லிவிங் டுகெதர்’ ஆக வாழப் போகிறதாம்!’’
- பர்வீன் யூனுஸ், ஈரோடு - 9.

‘‘உங்க டைரக்டர் ஒரு நிமிஷம் கூட சும்மா இருக்க மாட்டார்னு நீ சொன்னது கரெக்ட்தான்...’’
‘‘எதை வைச்சு சொல்ற?’’
‘‘உங்க படத்துல நடிச்ச நாய் குட்டி போட்டிருக்கே!’’
- வி.சாரதிடேச்சு,சென்னை - 5.

‘‘உங்க வொய்ஃப் பாத்ரூம் சிங்கரா இருக்கலாம். அதுக்காக அவங்க குளிக்கும்போது கூடவே டிரம்ஸ், வயலின் வாசிக்க ஆள் வேணும்னு நீங்க கேட்கறது கொஞ்சம் கூட நல்லா இல்ல!’’
- எஸ்.ராணி, பழைய விளாங்குடி.

‘‘வட்டச் செயலாளர் நமக்கு எதுவும் செய்யலைதான். அதுக்காக ‘புதிய இந்தியாவின் பழைய ஐநூறே’னு ப்ளக்ஸ் பேனர் வைச்சு அவரை செல்லாக் காசுனு சொல்றதா?!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

‘‘எதுக்காக பிங்க் கலர்ல பிளவுஸ் எடுக்கற?’’
‘‘அப்பத்தானே இரண்டாயிரம் ரூபா தாளை உள்ள வைச்சா தெரியாது?!’’
- கி.ரவிக்குமார், நெய்வேலி - 803.