பட்டர் சிக்கன் பளபளப்பு!



காவிரியில் தமிழகத்தின் உரிமை மறுத்து ஒற்றுமை அறுக்கும் கட்சிகளின் சுயநல வெறுப்பரசியலில் எரிவது விவசாயிகள்தான் என்ற காவிரி கட்டுரை அமில நிஜம்.
- செ.அங்கயற்கண்ணி, சென்னை-33.

தன் மகளின் விவாகரத்து ஒரு தந்தையாக ரஜினி மனதை கலங்க வைக்கும்தான். தெம்பா எழுந்து வாங்க தலைவா!
- எம்.பர்வீன் பாத்திமா, திண்டுக்கல்.

பிரபுதேவாவின் ஓபன் பேட்டியில் ஜிகினா இல்லாத பேச்சு சிம்ப்ளி சூப்பர். எமியின் படங்கள் பட்டர் சிக்கன் பளபளப்பில் அமர்க்களம்.
- எல்.ஜெயரஷிதா, திருவண்ணாமலை.

நீர் மாசுபாட்டால் கைரோனோமிட் பூச்சிகள் வீட்டுக்குள் டைனமைட்டாக விழுமா? திகிலாகுதே சார்!
- எஸ்.ராமமூர்த்தி, திருப்பூர்.

ரயில்வேயின் 92 பைசாவில் பத்து லட்ச ரூபாய் இன்சூரன்ஸ் டிலைட் ஐடியா தூள்! மத்திய அரசின் அக்கறைக்கு க்ளாப்ஸ் ஷ்யூர்.
- கே.ஏ.கிருஷ்ணவேணி, சிதம்பரம்.

ஷாலினியின் டவுன்லோடு மனசில் காதல், திருமணம், வாழ்வு, சமூகம் குறித்து பேசிய அனைத்து சொற்களுமே இனிய தோழியின் பாசநேச ஆறுதலாக அமைதி தந்தன.
- ஜானகி ரங்கநாதன், சென்னை-4.

குளோசப் உறவுகளுக்கு வாய் சுத்தம் முக்கியம் எனக் கூறிய செகண்ட் ஒப்பீனியன் ஃபிட்னஸ் தொடராக நல்வாழ்வுக்கு ஸ்வீட் வெல்கம் சொல்கிறது.
- பி.ஷிவதா கணேஷ், வேலூர்.

25வது திருமண நாளைக் கொண்டாடிய ராதாவின் அனுபவங்கள், நவீன லவ் ஹார்ட்களுக்கு ஷ்யூர் டெடிகேஷன்தான்.
- பெ.மாலதி, விழுப்புரம்.

ஈழப்போரில் நேச உறவுகளைத் தொலைத்த ஏக்கங்களின் கண்ணீர் பிரதிபலிப்பை ஆதங்கமும் இயலாமையும் வழியப் பேசிய கட்டுரையில் நெஞ்சு கரைந்தது.
- யு.துரைமோகன், தூத்துக்குடி.

கறுப்பு பிளவுசும் கலங்க வைக்கும் ப்யூட்டியுமாக காஜல் நம் நெஞ்சில் கொளுத்துகிறார் ஆட்டம்பாம் திரியை.
- ச.மோகனசுந்தரம், கோவை.

நிலத்தின் அசுரப்பசிக்கு தீராது உணவாகும் எளிய மனிதர்களைப் பேசிய ‘உறவெனும் திரைக்கதை’ தொடர், உணர்வுகளின் கலர்ஃபுல்
ரங்கோலி.
- க.ஜனனி, புதுச்சேரி.

அட்டையில்: காஜல் அகர்வால்
ஸ்பெஷல் படம்: முத்துக்குமார்
படம் நன்றி: தி சென்னை சில்க்ஸ்