வலைப்பேச்சு



@arattaigirl
முன்னே எதுக்கெல்லாம் கோபம் வந்ததோ, இப்ப அதையெல்லாம் சிரிப்போட கடக்கப் பழகியாச்சு. பக்குவமா, விரக்தியானுதான் தெரியல!

@kumarfaculty  
‘தேர்வில் அடிஷனல் ஷீட் அதிகம் வாங்குபவர்கள், அதிக மதிப்பெண் வாங்குவார்கள்’ என்பது பள்ளிப் பருவ மூட நம்பிக்கைகளுள் ஒன்று.

@minimeens  
பத்து வருஷம் முந்தின போட்டோவைப் பாத்து ‘அப்ப நெறயா முடி இருந்திருக்கே சார்’ங்கறாரு ஒருத்தர். பின்ன... பிறக்கும்போதே சொட்டையோடவா பிறந்திருப்பேன்?

பிச்சைக்காரன்: மேடம், பாக்க நீங்க சமந்தா மாதிரியே இருக்கீங்க. இந்த குருடனுக்கு 10 ரூபா கொடுங்க, ப்ளீஸ்..! கணவன்: 100 ரூபாயா கொடுடீ... சத்தியமா இவன் குருடன்தான்!

பசங்க ஜீன்ஸை பொண்ணுங்க போட்டா அது முற்போக்கு; பொண்ணுங்க கம்மலை பசங்க போட்டா, அவன் பொறம்போக்கு...
# என்ன உலகமடா இது?
- ஆர் ஜே தமிழன்
‘‘என் ஆளுக்கு செம கண்ணு... கண்ணே பேசும்!’’
‘‘அப்பறம் வாய் எதுக்குடா இருக்கு? அது அதை அதோட வேலைய செய்ய விடுங்க பதருகளா...’’
- ஆஷி என் ஆஷிகா

@saattooran  
கல்யாண புரோக்கர்: சார், பொண்ணு பெரிய இடம். ஆனா ஒரு கண்டிஷன் - ரெண்டு வருஷத்துல விவாகரத்து கேப்பாங்க. சரின்னா சொல்லுங்க... மேல பேசுவோம்!

@Aruns212  
குழந்தைகளை வழக்கமாக அழைக்கும் செல்லப் பெயர்களை விடுத்து, அவர்களின் பெயரைச் சொல்லி அழைத்தால், ‘‘அப்பா! கோபமா இருக்கியா?’’ என்று கேட்கிறார்கள்.

@InbaSankar
‘வலிக்காதுடா செல்லம்’னு கூட்டிட்டுப் போயி ஊசி போட்டப்பதான் குழந்தைகள் முதல் நம்பிக்கை துரோகத்தை உணர்ந்திருக்க வேண்டும்.

@ValluvarM
செவ்வாயில் மனிதர்கள் வாழ முடியுமா? ஆராய்ச்சி தொடங்கியது - செய்தி
முதல்ல பூமியில் மனிதர்கள் வாழ வழி செய்யுங்க ஆபீசர்ஸ்...

 காலைல சாப்பிட்டுட்டு இருக்கும்போது கண நேரத்தில் உதித்த சந்தேகம்... ‘ஒருவேளை இட்லி சைனீஷ் ஃபுட்டா இருக்குமோ! புருஸ்லீ, ஜெட்லீ, இட்லீ

வீடு எந்த சத்தமுமில்லாம அமைதியா இருக்குன்னா, மின்சாரமில்லைன்னு அர்த்தம். அதுவே மயான அமைதியா இருந்தா சம்சாரம் இல்லன்னு அர்த்தம்.

‘‘மச்சான், ஜியோ சிம் வாங்கிட்டியா..?’’
‘‘இல்ல மச்சான்! ஐபோன் 7க்கு அது சப்போர்ட் ஆகாதாம். அதனால வாங்கல...’’
‘‘அடப்பாவி! ஐபோன் 7 வாங்கிட்டியா?’’
‘‘இல்ல மச்சான்! ஜியோ சிம் ஐபோன் 7க்கு சப்போர்ட் ஆகாதாமாம். அதனால அதையும் வாங்கல!’’
- மினி மீன்ஸ்

வயது வந்த பெண்ணுக்கு லெக்கிங்ஸ், ஜீன்ஸ் போட்டுவிட்டு... ஐந்து வயது குட்டிப் பாப்பாவுக்கு புடவை தாவணி கட்டி அழகு பார்க்கறது நம் தமிழ்க் கலாசாரம்.

கணவன்: பசிக்குதுடி... சாப்பாடு ரெடியா?
மனைவி: கொஞ்சம் இருங்க... போட்டோ எடுத்து ஃபேஸ்புக்ல போட்டுட்டு வர்றேன்!
(சிறிது நேரம் கழித்து...)
கணவன்: என்னடி... சாப்பாடு நல்லாவே இல்லை?
மனைவி: நல்லா இல்லையா? எனக்கு 55 லைக்ஸ் வந்திருக்கு.

 தாய்: ஜோசியரே, எவ்வளவு பரிகாரம் செய்தும், என் பையன் வெளிநாடு செல்வது தடைபட்டுக்கிட்டே வருதே..?
ஜோசியர்: பையன் பெயரை ‘மோடி’ன்னு மாத்திப் பாருங்களேன்!

ஒரு எலி தன் குடும்பத்தோடு போய்க் கொண்டிருந்தது. அப்போது திடீரென ஒரு பூனை வழி மறித்தது. தாய் எலியும், குட்டி எலிகளும் பயத்தில் உறைந்து நிற்க, தந்தை எலி தைரியமாக முன்னே பாய்ந்து, ‘லொள்... லொள்...’ என்று சத்தமிட்டது. அதிர்ச்சி அடைந்த பூனை ஓடிவிட்டது. குட்டி எலி அப்பாவிடம், ‘‘இது என்ன கூத்து..?’’ என்று கேட்க, அப்பா எலி சொன்னது...
‘‘DO YOU UNDERSTAND THE IMPORTANCE OF THE 2ND LANGUAGE!’’

@Prabinraj1 
பொண்ணுங்க மனதை மட்டுமல்ல, அவங்க போன்ல பேசுவதையும் புரிஞ்சிக்க முடியல!
# எவ்ளோ பக்கத்தில நின்னாலும் ஒட்டுக் கேட்க முடியல பாஸ்.

@kalasal 
இன்னுமாடா கிஃப்ட்டுக்குள்ள பேப்பரைச் சுத்திக் கொடுத்து, அதை ‘காமெடி’னு நம்பிட்டு இருக்கீங்க?

தப்பை அவர்கள் செய்துவிட்டு, நம்மை மன்னிப்புக் கேட்க வைக்கிற திறமை பெண்களுக்கும் மேனேஜர்களுக்கும் மட்டுமே உண்டு!
- கவியரசன் திருஞானம்

ஜலதோஷம் வந்தா நம்ம கூட ஒரு வாரம் தங்குது! இந்த சந்தோஷம் மட்டும் வந்த உடனே போயிடுது!!
# என்னடா வாழ்க்கை இது?
- ரவீந்திரன் ராக்

காதல் தத்துவம்ஸ்
* பஞ்சர் போடாத டயரும், மேக்கப் போடாத ஃபிகரும் ரோட்ல போனதா சரித்திரம் இல்ல.
* பாசக் கயிற வீசுற எமனும் பார்வைய வீசுற வுமனும் பால் ஊத்தாம போனதா சரித்திரம் இல்ல.
* கடவுள் காதலித்தால் அது புராணம், மனிதன் காதலித்தால் அவனுக்கு மயானம்.
* ஊரில் அதிகமா தண்ணீர் பிடிக்கும் பொண்ணும் பாரில் அதிகமா தண்ணி அடிக்கும் ஆணும் சண்டை போடாம வீட்டுக்கு வந்ததா சரித்திரம் இல்ல.
* மழையில நனைஞ்ச மண்ணும் மனசுல நெனச்ச பொண்ணும் கண்டிப்பா ஒரு நாள் காலை வாரி விடும்.
* நின்ன இடத்துல சுத்துனா கடிகாரம்னு அர்த்தம், நிக்க முடியாம சுத்துனா குடிகாரன்னு அர்த்தம்.
* கல்லால் அடிபட்ட நாயைவிட காதலால் அடிபட்ட பாய்தான்
அதிகம்.

@sandiyar
வாஷிங்டனில் மர்ம மனிதன் துப்பாக்கியால் சுட்டு 3 பேர் பலி: செய்தி
# நாமளாச்சும் சாதி, மதம், மொழின்னு ஒரு கான்செப்டோட சண்டை போடுவோம்... இந்த லூசுங்க சும்மா மாத்தி மாத்தி சுட்டுக்குங்க!

ஒரு கரண்டி மாவை இட்லியா சுட்டா 10 ரூபாய், தோசையா சுட்டா 40 ரூபாய்... அது போலதாங்க நம்ம மனசும்! அது குறுகி
யிருக்காம, பரந்து இருந்தா மதிப்பு கூடும்!
- பைபாஸ் என்.இராம் குமார்

‏@urs_priya
படித்ததில் பிடித்தது, படித்ததில் ரசித்தது, படித்ததில் வலித்தது... இவையெல்லாம் பிறிதொரு நாளில் ‘படித்ததில் மறந்தது’ லிஸ்ட்டில் சேர்ந்து விடுகின்றன!

‏@BoopatyMurugesh
எஞ்சினையும் ரயில் பெட்டிகளையும் பிரிச்சு பயணிகளைக் காப்பாத்துறது ‘தொடரி’ கதையாம்... இப்பெல்லாம் ரயில பிரிக்கக்கூட தனுஷைத்தான் கூப்பிடுறாங்க!

@Vadivarasu Pradeepan
பேச்சிலர்களின் ஃபெஸ்டிவல் தினங்கள் பெரும்பாலும் டீ, பிஸ்கெட்டிலேயே கடந்து விடுகின்றன.

ஒண்ணாப்பு புள்ள கடிச்சு வச்ச பென்சிலின் பின்புறமாய் நைந்து கிடக்கிறது மனசு!
- கிஷோர் குமார்

கத்தியை விட பேனா முனை கூர்மையானது- பழமொழி; பேனாவின் முனையை விட கட்டை விரலின் முனை வேகமானது...
# ஆண்ட்ராய்டு தத்துவம்
- நண்பன் நாகராஜ்

மதம் தாண்டி இயேசு கற்பிக்கும் விஷயம் ஒன்றுதான்... நமக்கான சிலுவைகளை நாம்தான் சுமந்து கொண்டிருக்கிறோம். நேரம் வந்ததும் ஆணி அடிக்கப்படுவோம்!
- கார்த்திகேயன்

குழந்தைப் பருவத்துல நோட்லதான் கிறுக்குனோம். இப்பவும் நோட்லதான் கிறுக்குறோம். பட், அப்போ 5 ரூபா நோட்டு;
இப்போ 15000 Galaxy Note.
- ஆர் வேலுமணி திருப்பூர்

அதென்ன நடுரோட்ல நிக்க வெச்சி சுடணும்? எதுவா இருந்தாலும் ரோட்டோரமா வெச்சிக்கோங்க... டிராஃபிக் ஆச்சின்னா ஆபீஸ் போக லேட்டாகும்ல!
- ஸ்வர வைத்தி

நாம கெஸ்ட்டா போன வீட்டு ரிமோட்டை நம்ம கையில கொடுத்து டி.வி பார்க்கச் சொன்னா, நமக்கு சாப்பாடு கன்பார்ம்னு அர்த்தம்; அவங்களே சேனல மாத்துனா, ‘கெளம்பு... கெளம்பு... கதவ அடைக்கணும்’னு அர்த்தம்!
- விவிகா சுரேஷ்

ஒருத்தன் புல்லட் வாங்கிருக்கான். ‘‘இப்ப வர்ற புல்லட் பழைய மாதிரி இல்லை’’ன்னு சொல்லிட்டு வந்துட்டேன்... வேற ஒண்ணும் இல்ல, வயித்தெரிச்சல்தான்!
- ரிட்டயர்டு ரவுடி

ராம்குமார் பிரேதப் பரிசோதனைக்கு தனியார் மருத்துவரை அனுமதித்தால் அரசு மருத்துவர்களின் நம்பகத்தன்மை பாதிக்குமென வாதாடிய தமிழக அரசே... முதலமைச்சரை தனியார் மருத்துவமனையில்  அனுமதித்திருப்பது, அரசு மருத்துவர்களின் நம்பகத்தன்மையைப் பாதிக்கவில்லையா?