குங்குமம் டாக்கீஸ்* தான் நடிக்கும் படங்களின் புரமோஷனில் எப்போதும் தலைகாட்டாமல் நயன்தாரா இருக்க, கேட்டுக் கேட்டு விழாவில் கலந்துகொள்ள கீர்த்தி சுரேஷ் ரெடியாக இருக்கிறார். அதனால் எல்லோருக்குமான அபிமான பட்டியலில் இருக்கிறார் கீர்த்தி.

* ‘அஜித் 57’ படத்தின் ஜார்ஜியா ஷெட்யூலை முடித்துவிட்டு தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் ‘கைதி நம்பர் 150’ ஷூட்டிங்கில் பிஸியாகிவிட்டார் காஜல் அகர்வால்!

* இயக்குநராக 15 நிமிட குறும்படத்தில் களை கட்டியிருக்கிறார் விக்ரமின் மகன் துருவ் விக்ரம். ‘குட்பை சார்லி’ என்ற அந்தப் படம் வெளியிட்ட அன்றே இணையதளத்தில் 54,000 பேர் பார்த்து எக்கச்சக்க லைக்ஸ் தட்டிவிட்டது.

* கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி, மடோனா செபாஸ்டியன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னையில் ஒரு ஷெட்யூலை முடித்தவர்கள் அடுத்து ஒரு டூயட் பாடல் காட்சிக்காக தென் அமெரிக்கா பறக்க உள்ளனர்.

* ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தை அடுத்து மீண்டும் தயாரிப்பில் இறங்கிவிட்டார் விஷ்ணு. கேத்ரின் தெரசா ஹீரோயின். ‘‘புரொடியூசர், உங்க படத்துல எனக்கொரு ரோல் கொடுங்க... ஆல் த பெஸ்ட் மச்சான்’’ என்று ஆர்யா வாழ்த்தி வீட்டியிருக்கிறார்.

* ‘மங்காத்தா - 2’ உருவாக ஆர்வமாக இருக்கிறார் அஜித். ஆனால் ஸ்கிரிப்ட் கையில் வைத்திருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டாராம். நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் ஸ்கிரிப்ட்டை செதுக்குகிறார் வெங்கட்பிரபு.

* ‘எஸ்3’யின் அறிமுக பாடல் கேட்டு அசந்துவிட்டார்  சூர்யா. உடனே ஹாரிஸ் ஜெயராஜை தொடர்புகொண்டு ‘‘டான்ஸுக்கு செம ஸ்கோப் உள்ள மியூசிக் கொடுத்திருக்கீங்க’’ என்று பாராட்டியிருக்கிறார். இந்தப் படத்தை தீபாவளிக்கு கொண்டு வந்துவிடலாமா என்று யோசித்தார் சூர்யா. அப்புறம் பொங்கல்  என யோசித்தார்கள். இப்போது எந்தப் பிரச்னையும் இல்லாத  டிசம்பர் 16ம் தேதியை முடிவு செய்துவிட்டார்கள்.

* உலகில் அதிக சம்பளம் வாங்கும் டி.வி நடிகைகளின் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார் பாலிவுட் குயின் பிரியங்கா சோப்ரா! கடந்த 2015 ஜூன் முதல் 2016 ஜூன் வரை சுமார் 65 கோடி ரூபாய் வரை சம்பாதித்திருக்கிறாராம். ‘குவான்டிகோ’ தொடரில் நடிக்கும் பிரியங்கா, விரைவில் வரவிருக்கும் ‘பே வாட்ச்’ தொடரிலும் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

* ‘‘இனிமேல் நடிகர்களை நம்பி சினிமா இருக்காது; இப்போது கதையும் உள்ளடக்கமும்தான் ஒரு படத்தை ஓட வைக்க முடியும்’’ என்றிருக்கிறார், இயக்குநர் கரண் ஜோஹர்.

* ‘‘பல கண்கள் பார்த்துக்கொண்டிருக்கும், பல இடங்களில் கேமரா வைத்திருப்பார்கள். எந்த ஒரு ஆங்கிளிலும் நம் உடல் தப்பாகத் தெரியாத மாதிரி பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், நம் காலத்துக்குப் பிறகும் அந்தக் காட்சி அழியாமல் இருக்கும். காதல் காட்சிகளில் நடிப்பது ரொம்ப சிரமம்’’ - இப்படி வெளிப்படையாகச் சொல்லியிருப்பவர், நடிகை ஜரீன் கான்.

* பெங்காலி மொழி படத்தின் ஷூட்டிங்கிற்காக கொல்கத்தா சென்று வந்த ராதிகா ஆப்தே, ‘‘கொல்கத்தாவில் இருக்கும்போது கொஞ்சம் கொஞ்சம் பெங்காலி கத்துக்க முடிஞ்சது. ஆனா, தமிழ்ல சில படங்கள் நடிச்சிருந்தும் இன்னும் தமிழ் கத்துக்க முடியல’’ என ஃபீல் ஆகியிருக்கிறார்.

* அமலா பாலின் இந்த லேட்டஸ்ட் போட்டோவை ட்விட்டரில் பார்த்து, ‘விவாகரத்தான பெண்கள்தான் ஹாட்’ என்று ஒருவர் கமென்ட் போட, கொதித்துவிட்டார் அமலாபால். ‘‘உங்களோட எண்ணம் தவறான பாதையில போகுது. பெண்களுக்கு மதிப்பு கொடுக்க முதலில் கத்துக்குங்க’’ என அமலா பதிலடி தர, பலரும் இணைந்து அந்த நபரைக் காய்ச்சி எடுத்துவிட்டனர். 

* கால் ஆபரேஷனுக்குப் பிறகு முழுமையாகத் தேறிவிட்டார் கமல். அலுவலகப் பணிகளில் கவனம் செலுத்தி வரும் அவர், விரைவில் ‘சபாஷ் நாயுடு’ ஷூட்டிங்கை தொடரவுள்ளார்.

* இயக்குநர் ராஜேஷ், சந்தானம் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இதனால் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தில் நடித்துக் கொடுக்க நட்புக்காக சந்தானமும் ரெடியாக இருந்தார். ஆனாலும் அவரைத் தொந்தரவு செய்ய விரும்பாமல் படத்தை முடித்துவிட்டார். ஆனால், சந்தானத்திற்காக ஸ்பெஷல் காட்சியைப் போட்டுக் காண்பிக்க ரெடியாகிவிட்டார் ராஜேஷ்.