ஹானஸ்ட் விதிகள்
வறுமை தாண்டி, வலி பொறுத்து மாரியப்பன் தாண்டிய உயரம், பாரா ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தின் உயரத்தை விட அதிகம்தான். தங்க மாரிக்கு வாழ்த்துகள். - எஸ்.சுடர்க்கொடி, சென்னை-33.
 புகாரைப் பதிவு செய்வதிலும், அதை வெளிப்படையாக வைப்பதிலும் ஆன்லைன் முன்னேற்றம் ஓகே. ஆனால் ஆட்சியாளர்களின் தலையீடு இல்லாமல் காவல்துறை பாரபட்சமற்று செயல்படுமா என்பது விடைதெரியாத கேள்விதான். - டி.குமரவேலன், திருச்செந்தூர்.
மதிச்சியம் பாலாவின் குரலில் பாட்டும் வாழ்வும் கோயில் மணியின் கணீர் ஒலியாய் காதில் ரீங்காரமிட்டு நெஞ்சம் வருடுகிறது. - எம்.சிவசகுந்தலா, கோவை.
தேன்மதுரக்குயில் எம்.எஸ். அம்மாவின் நினைவுகளைப் பகிர்ந்த வீயெஸ்வி கட்டுரையால் மனதேசம் முழுவதும் எம்.எஸ்ஸின் கற்கண்டுக் குரல் தித்திப்பு. - ஆர்.ஜானகி, கும்பகோணம்.
லடாக் மக்களின் நிதான வாழ்வு குறித்த ஜெயமோகனின் எழுத்தில் கிடைத்த புத்துணர்வு இதுவரை தரிசிக்காத ஒன்று. - ஜெ.வினோத்பாலு, திருவண்ணாமலை.
மரபு விளையாட்டான ஜல்லிக்கட்டைக் காக்க இமயத்திலும் போராட்டம் நடத்திய அஸ்வின் ராமசுப்புவுக்கு ஆசம் சொல்லலாம். - எல்.ஜீவேந்திரன், திண்டுக்கல்.
கள்ளனைக் கவிழ்க்கும் செல்ல அழகியாக ‘கள்ளன்’ நாயகி நிகிலா பம்பர மிட்டாய் மினுமினுப்பு. - அ.சீனிவாசன், விழுப்புரம்.
ஜாக்கிக்கு இப்போதுதான் ஆஸ்கர் விருது கிடைக்கிறது. குழந்தைகளை ஈர்க்கும் ஜாக்கியின் ஹானஸ்ட் விதிகளுக்கு அவர் எத்தனையோ விருதுகளை ஏற்கனவே பெற்றுவிட்டார். - ச.ரோஷன் சின்னசாமி, தூத்துக்குடி.
ஸ்மார்ட் போனில் லைசென்ஸ் காட்டி கெத்து நடை போடலாம் என்ற செய்தி ரோட்டில் கப்பம் கட்டுபவர்களுக்கு க்ரீன் சிக்னல் நிம்மதி. - ஐ.குமரேசன்சிவா, பெங்களூரு.
நாட்டு நடப்புகளை அநியாயத்திற்கு கிண்டல் குழம்பு வைத்தாலும், பரபரப்பு காட்டும் சுமார் விஷயங்களின் கோமாளித்தனத்தை சுருக்கென குத்தி உணர்த்து வதில் ‘குட்டிச்சுவர் தகவல் பலகை’ ஹிட் அள்ளுகிறது. - வி.சுப்பிரமணி, புதுச்சேரி.
அமெரிக்காவிலும் தொட்டுத் தொடரும் திகில் திருப்பங்களாக சுபா எழுத்து அசரடிக்கிறது. - சி.ராஜ்குமார், தர்மபுரி.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் மனசிலிருந்து இறங்கியிருக்கும் கருத்துகள் உண்மையாகவும் அவரின் உள்ளுணர்வுகளை வெளிப்படுத்துவதாகவும் இருந்தது சிறப்பு. - க.நா.ராமகிருஷ்ணன், சென்னை-26.
|