குங்குமம் டாக்கீஸ்
* பேயாக நடித்து வரும் படத்திற்கு பிரேக் விட்டுவிட்டு, சிங்கப்பூரில் நடந்த சைமா விருது விழாவிற்கு விக்னேஷ்சிவனுடன் ஜோடியாகப் பறந்து வந்திருக்கிறார் நயன்தாரா.
* செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’யில் நந்திதாவிற்கு ஆக்ஷன் சீன்கள் நிறைய. அதற்காக தற்காப்புக் கலைகளைப் பல நாட்கள் பயிற்சி எடுத்து பண்ணியிருக்கிறார்.
* அஜித் நடிக்கும் அடுத்த படத்தின் ஹீரோயின் அனுஷ்காதான். அவர்கள் கேட்கும் நிறைய தேதிகள் அவரிடம் மட்டுமே இருக்கிறது!
* நடிகர் விஜய்யோடு அவரது மகன் சஞ்சய் இருக்கும் லேட்டஸ்ட் படம் வெளியாகி இருக்கிறது. விஜய்யை விட உயரத்தில், அவரை மாதிரியே இருக்கிறார். இது லண்டன் திருமணம் ஒன்றில் எடுத்த படமாம்.
* நாகார்ஜுனாவின் மகன்களுக்கு இது கல்யாண கிசுகிசு சீஸன். நாக சைதன்யா சமந்தா காதல் தகவல்கள் ஒரு பக்கம் சிறகடிக்க, இன்னொரு புறம் தம்பி அகில், டிசைனர் ஷ்ரியா பூபல் என்பவரைக் காதலிப்பதாக கற்பூரம் அடித்து சத்தியம் செய்கின்றன ஐதராபாத் மீடியாக்கள்.
* ‘அன்பானவன், அசராதவன் அடங்காதவன்’ படத்திற்காக ‘புது’ கெட்டப்பிற்குள் வந்துவிட்டார் சிம்பு. அதனால் பழைய மெலிந்த தோற்றத்தில் கௌதம் மேனன் படத்தில் கலந்துகொள்வது இப்போதைக்கு இல்லை.
* ஜீவா, காஜல் அகர்வால் நடிக்கும் ‘கவலை வேண்டாம்’ படப்பிடிப்பு ஊட்டியில் பரபரக்கிறது. ஒரு மலைக் கிராமத்தில் ஷூட்டிங் நடந்தபோது, ஊர் மக்கள் காஜலுக்கு தங்கள் வீட்டிலிருந்து டீ போட்டு வந்து கொடுத்திருக்கிறார்கள். அந்த அன்பில் நெகிழ்ந்திருக்கிறார் காஜல்.
|