தத்துவம் மச்சி தத்துவம்



எவ்வளவு பெரிய ஞானியா இருந்தாலும் அவரால ‘அஷ்டமா சித்தி’தான் அடைய முடியும். அஷ்டமா ‘பெரியம்மா’வை அடைய முடியாது...
சுத்திச் சுத்தி அலைந்தும் சித்தி அடையாதோர் சங்கம்
-வி.சகிதா முருகன், தூத்துக்குடி.



‘‘நீ திருடினது மட்டுமில்லாம உன் மனைவியையும் திருட்டுல ஈடுபடுத்தியிருக்கே..?’’
‘‘இந்தக் காலத்துல வீட்ல ரெண்டு பேரும் சேர்ந்து சம்பாதிச்சாதான் குடும்பத்தை காப்பாத்த முடியும், எஜமான்!’’
-சி.சந்தோஷ்குமார்,
வெள்ளாளப்பட்டி.

‘‘எங்கள் தலைவர் கொஞ்சம் டென்ஷன் பார்ட்டிதான். அதற்காக அவரை கோர்ட்டில் குறுக்கு விசாரணைக்கு பதில் கிறுக்கு விசாரணை செய்வதை வன்மையாகக் கண்டிக்கிறோம்...’’
-க.கலைவாணன்,
திருத்தணி.

‘‘சினிமா போஸ்டர் ஒட்ட வந்தவன் கிட்ட என்ன தகராறு?’’
‘‘படத்தோட கதை பிடிச்சிருந்தாதான் போஸ்டர் ஒட்டுவேன்னு அடம்
பிடிக்கிறான் சார்!’’
-க.கலைவாணன், திருத்தணி.

‘‘தலைவருக்கு அரசியல் பண்ணத் தெரியலைன்னு எப்படிச் செல்றே?’’
‘‘இன்னும் ஒரு குற்றப் பத்திரிகைகூட வாங்காம இருக்காரே!’’
 பெ.பாண்டியன்,
கீழசிவல்பட்டி.

‘‘உங்க பொண்ணுக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை பார்க்கட்டும்..?’’
‘‘ரொம்ப வசதி இல்லேன்னாலும், ஒரு கண்டெய்னர் டிரைவரா இருந்தா போதும்!’’
-எஸ்.எஸ்.பூங்கதிர், வில்லியனூர்.

‘‘தேடல்தானே வாழ்க்கை...’’
‘‘கரெக்டா சொல்லிட்டீங்க சுவாமிஜி! உங்களை ஆறு மாசமா தேடிட்டிருக்கிற சி.பி.சி.ஐ.டி போலீஸ்தான் நான்!’’
-பி.ஜி.பி.இசக்கி, பொட்டல்புதூர்.