கவர்ச்சி டைனமைட்!
தமன்னாவின் ‘தேவி’ ஸ்டில்ஸ் ஒன்ஸ்மோர் கேட்கத் தூண்டும் அழகு. பிரபுதேவாவுடன் தேவதேவியாக தமன்னா டாப் முதல் பாட்டம் வரை பக்கா! -அருண் கே.துரைசாமி, கோவை.
சிலைக் கடத்தல் குறித்த ஏ டூ இசட் தகவல்கள் திகில் கிளப்பின. கோயில் சிலைகள் இன்னும் ஆவணப்படுத்தப்படாமலே இருப்பது அவலம்! -ஜெ.மாலினி நடராஜ், சென்னை33
கவர்ச்சியை அள்ளித் தெளிக்கும் ‘அனேக’ அழகி அமைராவின் படங்கள் டைனமைட்டாய் எங்கள் இதயத்தை சிதறடித்தன! -கே.கிரண்குமார், திருவள்ளூர்.
மற்ற விளையாட்டுகள் எப்படி தன்னை கிரிக்கெட் விளையாடத் தயார்படுத்தியது எனும் கார்ட்னி வால்ஷின் கருத்து, கிரிக்கெட் பித்தர்களுக்கு நெத்தியடி! -கே.ஜனா மணிமாறன், புதுச்சேரி.
11 ஆண்டு காலக் காதலிலும் சரி, வாழ்விலும் சரி, போராடி வென்றிருக்கும் ஐ.ஏ.எஸ் அகாடமி சங்கர், நமக்கெல்லாம் பெருமிதம் தரும் எடுத்துக்காட்டுதான்! -மு.மோகனசுந்தரம், தூத்துக்குடி.
‘பறந்து செல்ல வா’ பட ஸ்டில்களில் பாஷாவோடு நெருக்கமும் இணக்கமுமாக நரேல், ஐஸ்வர்யா ராஜேஷ் பரவசப் பட்டாசு! எஸ்.நரேந்திரன், சேலம்.
உருகும் ஆர்க்டிக் பனிக்கு இடையில் பியானோ வாசிக்கும் படம் அத்தனை அழகு. ஆனால், இந்தத் துயரத்துக்கு நாம்தான் காரணம் என்பது வேதனை! -பி.ம.ஜெயராமன், சென்னை4.
அடித்தட்டுக் குடும்பங்களிலிருந்து 27 ஆசிரியர்கள் மற்றும் 7 அரசுப் பணியாளர்களை உருவாக்க முயற்சி எடுத்த கனகராஜையும் அவருக்கு உறுதுணையாக இருந்தவர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். -ஜி.பீ.சாமுவேல், காரமடை.
பண்ணை அடிமையாக இருந்து வீரிய சிறுபொறியாக எழுந்து நிற்கும் கனகராஜின் கல்விக்கனவு வானம் தொட வாழ்த்துகள்! -டி.கவிதா துரைராசு, ஈரோடு.
குப்பைகளை மறுசுழற்சி செய்து பணமாக்கும் கும்பகோணம் நகராட்சி, பல மாநகராட்சிகளுக்கு முன்மாதிரி! -ஜி.கே.சிவக்குமார், வேலூர்.
கும்பகோணம் நகரில் மலைபோல் குவிந்திருந்த குப்பைகளை அகற்ற புதுமை முயற்சி எடுத்த நகராட்சி அதிகாரிகளுக்கு வாழ்த்துகள். அரசுத்துறையில் இவ்வளவு திறமையான அதிகாரிகள் இருப்பது பெருமிதம் தருகிறது. இப்படிப்பட்ட முயற்சிகளுக்கு அங்கீகாரம் தந்து எழுதுவதில் ‘குங்குமம்’ தனித்து விளங்குகிறது. -கே.சுகுமார், சென்னை29.
|