jokes



‘‘தலைவர் ஏன் கறுப்புப் பூனைப்படை ஆளுங்க மேல கோபமா இருக்காரு?’’
‘‘அவர் சம்சாரம் அடிக்க வரும்போது அவங்க வந்து
தடுக்கலையாம்!’’



‘‘தலைவர்கிட்ட அடி வாங்கணும்னா ஏன் எல்லாரும் சந்தோஷமா போறாங்க..?’’
‘‘தலைவர்தான் எல்லாரையும் பணத்தால அடிப்பாரே!’’

‘‘உங்க படத்துல கதாநாயகி ஏன் டைப்பிஸ்ட்டா
வர்றாங்க..?’’
‘‘அப்புறம் படத்துல கதாநாயகிக்கு வேலையே இல்லைனு யாரும் சொல்லக் கூடாது பாருங்க, அதான்!’’

‘‘தலைவர் ஏன் கட்சிக் கொடியா கறுப்புக் கொடியை
வச்சிருக்காரு?’’
‘‘அப்பதானே தலைவர் எங்க போனாலும் ஜனங்க
தலைவருக்கு கட்சிக் கொடிய காட்டுவாங்க!’’
-வி.சாரதி டேச்சு, சென்னை5.