ஸ்பீக்கரு...
‘‘அடுத்தபடியாக பிகாஸோ ஓவிய மாகத் திகழும் மகளிர் அணித் தலைவி அவர்கள் பேசுவார்கள்...’’ பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.
‘‘அரசியலுக்குப் போனதுல இருந்து டாக்டர் ரொம்பவே மாறிட்டார்!’’ ‘‘எப்படி?’’ ‘‘பேஷன்ட்ஸ் பத்தி உறவினர்கள் கேட்டா ‘எதையும் 234 மணி நேரம் கழிச்சிதான் சொல்ல முடியும்’ங்கிறாரே!’’ வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.
‘‘என்னப்பா சர்வர் இது? பேப்பர் ரோஸ்ட்ல ஏதோ கட்டம் கட்டமா இருக்கு?’’ ‘‘புதுசா குறுக்கெழுத்துப் போட்டி அறிமுகப்படுத்தி யிருக்கோம் சார்!’’ யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.
‘‘தலைவரு இதுக்கு முன்னாடி பல பேரை டெபாசிட் இழக்க வச்சிருக்காரு!’’ ‘‘அப்படியா?’’ ‘‘ஆமாம்... பைனான்ஸ் கம்பெனி வச்சு இருந்தாரே!’’ மு.க.இப்ராஹிம், வேம்பார்.
என்னதான் நமக்குனு குடும்ப டாக்டர் இருந்தாலும், அவரை நம்ம குடும்ப ரேஷன் கார்டில் மெம்பரா சேர்க்க முடியாது! ரேஷன் கார்டுக்காக அலைந்து ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனவர்கள் சங்கம் சக்தி இளங்கோ, தஞ்சாவூர்.
‘‘உங்களுக்கு எப்படி 10 கோடி ரூபாய் வந்துச்சு?’’ ‘‘கட்சித் தோழர்கிட்ட கடன் வாங்கினேன் யுவர் ஆனர்!’’ ‘‘தோழருக்கு ஏது பணம்?’’ ‘‘நான் கடன் கொடுத்தேன் யுவர் ஆனர்!’’ சீர்காழி ரேவதி, தஞ்சை.
‘‘பேப்பர் ரோஸ்ட் சாப்பிடும்போது தலைவர் ஏன் கண் கலங்குகிறார்?’’ ‘‘பேப்பர் ரோஸ்ட்டில்கூட தன் பெயர் வரமாட்டேங்குதேன்னுதான்...’’ க.கலைவாணன், திருத்தணி.
|