ராகு - கேது பரிகாரத் தலங்கள்
நாகமுகுந்தன்குடி: சிவகங்கை மாவட்டம், இளையான்குடியிலிருந்து வடமேற்கே 5 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
நாகப்பட்டினம்: காயாரோகணேஸ்வரர் எனும் இத்தல இறைவனை ஆதிசேஷன் பூஜித்து மகிழ்ந்தார். அம்பாளுக்கு நீலாயதாட்சி எனும் திருப்பெயர்.  சென்னை-குன்றத்தூர்: பூவிருந்தவல்லிக்கு அருகேயுள்ள இத்தலத்தில் காமாட்சி அம்மன் சமேதராக நாகேஸ்வரர் அருட்பாலிக்கிறார்.
சென்னை-கெருகம்பாக்கம்: சென்னை போரூர்&குன்றத்தூர் பாதையில் கெருகம்பாக்கத்தில் இத்தலம் உள்ளது. போரூர் சந்திப்பிலிருந்து 3 கி.மீ தொலைவு. நீலகண்டேஸ்வரர், ஆதிகாமாட்சி எனும் திருப்பெயர்களோடு இறைவனும், இறைவியும் அருள்கின்றனர்.
கோடகநல்லூர்: திருநெல்வேலியிலிருந்து மேற்கே 13 கி.மீ. தொலைவிலுள்ள இத்தலத்தில் காளத்தீஸ்வரர் எனும் திருநாமத்தோடு இறைவன் அருட்பாலிக்கிறார்.
திருக்களாஞ்சேரி: மயிலாடுதுறை, தரங்கம்பாடிக்கு அருகேயுள்ள இத்தலத்தில் மூலவர் சுயம்புலிங்கமாக நாகநாதர் அருட்பரப்புகிறார்.
ஆம்பூர்: வேலூர், வாணியம்பாடிக்கு அருகில் இத்தலம் உள்ளது. அபயவல்லி சமேத நாகரத்தின சுவாமி எனும் திருப்பெயர்களோடு இறைவனும், இறைவியும் அருட்பாலிக்கின்றனர். பெத்தநாகபுடி: திருவள்ளூர் மாவட்டம், சோளிங்கருக்கு மேற்கே 12 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. நாகவல்லி சமேத நாகநாதேஸ்வரராக இங்கு எழுந்தருளியிருக்கின்றனர்.
திருக்கண்ணங்குடி: திருவாரூர்-நாகை பாதையிலுள்ள கீழ்வேளூருக்கு 3 கி.மீ, தொலைவில் இத்தலம் உள்ளது. சுயம்பு லிங்கமாக காளத்தீஸ்வரர் எனும் திருப்பெயரோடு வீற்றிருக்கிறார்.
ஊஞ்சலூர்: ஈரோடுக்கு அருகேயுள்ள கொடுமுடியிலிருந்து 7 கி.மீ. தொலைவிலுள்ள இத்தலத்தில் நாகேஸ்வரர் மூலவராக வீற்றிருக்கிறார்.
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சி காமாட்சியம்மன் கோயிலுக்கு அருகேயுள்ளது. மாகாளன் எனும் நாகம் காளத்திநாதர் ஆணைப்படி இங்கு லிங்கம் அமைத்து பூஜித்தது. மூலவர் மகாகாளேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். ராகு-கேது பூஜித்த தலமும் ஆகும்.
|