கருட பிரம்ம வித்யை



கிரந்தி மங்கேப்ய; கிரண நிகுரும்பா அம்ருதரஸம்
ஹ்ருதி த்வாமாதத்தே ஹிமகரசிலா மார்த்தி மிவய
ஸஸர்ப்பாணாம் தர்ப்பம் சமயதி சகுந்தாதிப இவ
ஜ்வர பிருஷ்டாத் திருஷ்டய ஸுகயதி ஸுதாதாரசிரயா’

சௌந்தர்ய லஹரியில் இருபதாவது ஸ்லோகம் இது. அம்பாளின் ஒளிமயமான சரீரத்தில் இருந்து ஏராளமான ஒளிக் கற்றைகள் வீசுகின்றன.அவற்றில் இருந்து அம்ருதரஸம் பெருகுகிறது. இந்த பாவனையில் அம்பாளை தியானித்து இந்த ஸ்லோகத்தை 108 முறை தினமும் ஆறுமாத காலம் ஜெபித்து வருபவன் கருடனுக்கு ஒப்பானவன் ஆகிறான். இவன் கையால் ஒரு துளி மண்ணை அல்லது சாம்பலை அள்ளிக் கொடுத்தாலும் விஷபயம் நீங்கும். தீராத நோய்கள் பஞ்சாய் பறக்கும்.

இத்தனை சிறப்பு வாய்ந்ந கருடனைப் பற்றி சில வரிகள். தங்க இறக்கைகள் கொண்ட கருத்மானாக அவரே(கடவுள்) இருக்கிறார் என்கிறது ரிக்வேதம். கருடனை மூன்றாகச் சொல்லலாம். ஆதிபௌதிக கருடன், ஆதிதைவீக கருடன், ஆத்யாத்மிக கருடன் என்று. உலகில் காணப்படுவது ஆதி பௌதிக கருடன். தெய்வமாக பாவித்து தியானம் செய்வது ஆதிதைவீககருடன். விஷக்கடியை இறக்கும் போது மந்திரம் சொல்லும் போது தானே கருடன் என்ற ‘கருடோஹம்’ பாவனையில் தம்மைத்தாமே கருடனாக நினைப்பது ஆத்யாத்மிக கருடன்.

முற்காலங்களில் தேசாந்திரம் செல்பவர்கள், துறவிகள் கருட பஞ்சாக்ஷரி கூறி தம் தண்டத்தால் தாம் படுக்கும் இடம் சுற்றி கோடு வரைந்து பாம்புகள் அண்டாமல் காத்துக் கொள்வார்கள். ஆஞ்சநேயர் சிறிய திருவடி. கருடன் பெரிய திருவடி. கருட் என்றால் சிறகு என்று பொருள்படும். பஞ்ச பட்சி சாஸத்திரத்தில் கருடன் பருந்து இனத்தைச் சேர்ந்தது என்று சொல்லப்பட்டுள்ளது. இவை வஸந்த ருதுவில் காதல் செய்யும். ஆண் பறவையால் பெண் பறவையை எளிதில் வசப்படுத்த முடியாது. வானத்தில் வட்டமிட்டு பல வகையில் தன் பலத்தை நிரூபித்து பெண்பறவையை வசப்படுத்தும்.

இணை சேர்ந்த அணும் பெண்ணும் சாகும் வரை வேறு ஒன்றின் துணை நாடாமல் கற்பு நெறி காக்கும். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் இணை சேர்ந்து முட்டையிடும். தாய்ப் பறவைதான் தன் குஞ்சுகளை முதுகில் ஏற்றிக் கொண்டுபோய் வானத்தில் பறக்கக்கற்றுக் கொடுக்கும். சில விஷயங்களைப் படிக்கும் போது மனிதனை விட பறவைகள் விலங்குகள் எவ்வளவோ மேல் என்று தோன்றுகிறது.

கொலம்பஸ் திசை தெரியாமல் கடலில் தவித்த போது கருடனை வேண்ட, அவர் வானில் பறந்து வந்து மேற்கு திசை நோக்கி அழைத்துச் சென்றதாக கதை சொல்வார்கள். மாவீரன் நெப்போலியன் கருடக் கொடியையே கொண்டிருந்தார். ஆதி காலங்களில் ஞானிகளும், துறவிகளும் விஷ ஜந்துக்களிடம் இருந்து தங்களைக் காத்துக் கொள்ளவும், பிறர்க்கு உதவும் பொருட்டும் கருடோஹம் என்ற பாவனையில் கோடிக்கணக்கில் ஜெபித்து சித்தி அடைந்து வைத்திருந்தார்கள். அதற்கான சிறந்த மந்திரம் கருடப்பிரம்ம வித்யா எனப்படும் கருட பஞ்சாக்ஷரி ஆகும். அதன் மூலமந்திரம்,

‘ ஓம் க்ஷிப ஸ்வாஹா ‘

ராம என்பது மரா என்று ஜெபிக்கப்பட்டதைப் போல பக்ஷி என்பது க்ஷிப என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த மந்திரத்தின் விரிவு இதோ, அடுத்து கருட காயத்ரி.

ஓம் தத் புருஷாய வித்மஹே
சுவர்ண பக்ஷாய தீமஹி
தன்னோ கருடப் ப்ரசோதயாத்’’ என்பதாம்.

மேற்கண்ட அனைத்து மந்திரங்களிலும் சிறந்ததாகவும், எளியதாகவும் கருதப்படுவது. கருட பிரம்ம வித்யை ஆகிய கருட பஞ்சாக்ஷரியே ஆகும். ராகு கேது தோஷமுள்ளவர்கள் கருட பிரம்ம வித்யையை ஹோமம் செய்து நலம் பெறலாம்.