கருணைமிகு கருடாழ்வார்மாயவனே மனத்தூயவனே!
மான்நோக்கே சர்ப்பமாலையனே!
காவலனே சதுர் வேதியனே!
கோமகனே கொடிமரமே!
நாரணனே அவன் வாகனனே!
நாபிளந்த நாகரை காப்பவனே!
கூர்மதியே ஒளி விழியே!
வேர்குலமே பகை அழிப்பவனே!

* மல்லிகையே மரிக்கொழுந்தே!
செம்பட்டு விரும்பி அணிபவனே!
நெல் வருமே நற்சொல் வருமே!
மனதிடம் வருமே அமுதகுடம் வருமே!
தேனிசையே குரல் கோகிலமே!
கனிசுவையே கார்முகிலே!
கருணை கருடனை வணங்கிடவே
இல்லத்தில் நலம் சேர்ந்திடுமே!

* பெருமானே பெரிய திருவடியே!
பெரும் சிறகே அணிகலனே!
ருத்ரவனே சுகீர்த்தியனே!
சத்தியனே வைரமணிமுடியே!
மலைமேருவை உடைத்தெறிந்தவனே
இலங்கை நாட்டை தந்தவனே!
விஷம் முறிப்பவனே வெற்றி குவிப்பவனே!
விலையிலா மணியை கொண்டவனே!

* வைகுண்டனே பெரியாழ்வாரே!
உயரம் பறக்கும் கருடாழ்வாரே!
வாழ்வில் உயரம் தருபவனே
துயரம் துடைத்து அருள்பவனே!
குருவை குருவாய் பெற்றவனே”
குறையிலா செல்வம் சேர்ப்பவனே!
மறைகள் போற்றும் மாதவனே!
துவாரகை நகரின் காவலனே!

* சிறகுடையான் தெய்வ சீருடையான்!
மறமுடையான் மாமருந்துடையான்!
விறலுடையான் நல்ல குரலுடையான்!
திறலுடையான் அமைதி குணமுடையான்!
குழலுடையான் கூர் மதியுடையான்!
அழலுடையான் வசிய அழகுடையான்!
அறமுடையான் தாய் அன்புடையான்!
செம்மண் நிறமுடையான்!
வணங்கிட வாழ்த்திடுவான்!

* கருடன் கருணை பெற்றிடுவோம்!
அருணன் அன்பை வென்றிடுவோம்!

- விஷ்ணுதாசன்