இரட்டிப்பு சந்தோஷம்!



உள்ள(த்)தைச் சொல்கிறோம்

‘நேர்மையாகப் பதிவு செய்யப்பட்ட. கோயில் கணக்குகள்’ கட்டுரையில், மருதூரில் உள்ள கயிலாசநாதர் ஆலயம் பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது. கோயிலின் ஒவ்வொருபகுதியிலும் உள்ள கடவுளின் விவரங்கள், இறைவன் குடிகொண்டுள்ள மண்டபங்கள் பற்றியும் படித்தபோது, நேரில்சென்று தரிசித்த அனுபவம் கிட்டியது. மனம் நிறைவுற்றது.
- எல்.மலர்க்கொடி லோகநாதன், சிகரலப்பள்ளி. 635104.

புதிய ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இத்தருணத்தில், பொறுப்பாசிரியரின் தலையங்கம் ஒரு உத்வேகத்தைத் தந்தது.
- சு.இலக்குமணசுவாமி, திருநகர், மதுரை - 6.

சூரியன் தகவல்கள் அனைத்தும் அருமை. பெரும்பாலானவற்றை இதற்குமுன் நான் எங்கும் படித்ததில்லை. சிறப்பு, வாழ்த்துகள்.
- ப.மூர்த்தி, பெங்களூரு.

காலம் கடந்து போனாலும் ஆக்கப்பூர்வமான எண்ணங்களை நினைக்கும் ஆலோசனையில் எதிர்மறை வினைகளை நாம் ஆற்றாமல் இருந்தாலே கடவுள் வேண்டுதலை நிறைவாகவே நிறைவேற்றுவார் என்பதைப் பொறுப்பாசிரியர் சிந்திக்க வைத்துவிட்டார்.
- எஸ்.எஸ்.வாசன், தென் எலப்பாக்கம்.

சிவ சூரியன், தாராசுரம் கோயில் கட்டுரைகளும், திருவாதிரை கமலயந்திரம் விளக்கமும் மிக அருமை. ஒளிக்கதிர்கள் மூலவரை ஜோதி மயக்குவது, பூர்வீகச் சொத்து கிடைக்க நோய் நொடியின்றி வாழ வழிவகுத்தது, திருக்குமரனின் திருஆவினன்குடி, திருக்கழுக்குன்றம் மகிமை எல்லாம் மயங்க வைத்தன. வளர்க ஆன்மிகம்.
- A.T.சுந்தரம், சென்னிமலை.

திருப்பாவை-திருவெம்பாவை என்கிற முத்துக்குவியல்களிலிருந்து இரண்டு முத்துகளை எடுத்து அவற்றின் பிரபாவங்களை விளக்கியிருந்த ஆழ்வார்க்கடியானுக்கு பாராட்டுக்கள். கவிஞர் கண்ணதாசன், சுகமான சிந்தனைகளை, எப்படிப்பட்ட நாத்திகனும், மோசமான அரசியல்வாதியும், காசுதான் கடவுள் என்றிருப்பவனும் மனம் மாறி ஞான வழிக்கு வந்துவிடுவார்கள் என்று விளக்கியிருந்தது வெகு உருக்கமாக இருந்தது.
- கே.ஆர்.எஸ்.சம்பத்,  திருச்சி.

சூரியன் பக்தி ஸ்பெஷல் இதழைப் படித்த பிறகுதான் சூரிய வழிபாட்டின் முழுமையான மகத்துவம் புரிந்தது. கர்நாடகா மகா சங்கராந்தி திருவிழாவைப் படங்களோடு படித்தது மெய் சிலிர்க்கச் செய்தது.
- வா.மீனாவாசன், வந்தவாசி.

அமராவதி ஆற்றங்கரையில் கடத்தூரில், அமர்ந்து அருள்பாலிக்கும் ஈசனையும், அம்பாளையும் ஒருசேர வணங்கினால், நீரிழிவு நோயின் கோரப்பிடியில் இருந்து முழுவதுமாக விடுபடலாம் என்ற செய்தி சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி!
- இராம.கண்ணன், திருநெல்வேலி.

சென்ற இதழுடன் இணைப்பாக வழங்கப்பட்ட காலண்டர் இரட்டிப்பு சந்தோஷம் தந்தது. பொறுப்பாசிரியரின் அணிந்துரை புத்தாண்டில் புதிய சிந்தனை தூண்ட துணைநின்ற விதம் மிகவும் அற்புதம்!
- துரை.இராமகிருஷ்ணன், எரகுடி.

மகோன்னதமாய் அருள்பாலிக்கும் மாஆஷாபுரா தேவி ஆலயத் தகவல்கள் யாவும் மெய்சிலிர்க்க வைத்தன.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.