வண்ணமயமான வாழ்வருளும் வீட்டு வர்ணங்கள்



வீட்டு உரிமையாளர்கள் பலர் வர்ணங்களை தேர்ந்தெடுப்பதில் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. எப்போதும் வரவேற்பறையை அடர் நிறங்களால் அலங்கரிக்கக்கூடாது. இங்கே அமர்ந்து பேசும்போது அந்த நிறங்கள் மனதை கிளர்ந்தெழச் செய்யும். எனவே இளம் வண்ணங்களிலேயே அறையின் உள்சுவருக்கு வர்ணம் தீட்ட வேண்டும்.

இளம் மஞ்சள், ஐவரி, லைம் ஒயிட், இளம் பிங்க் போன்ற வர்ணங்கள் ‘ச்சீ’ சக்தியை உள்ளிழுத்து தக்க வைத்துக் கொள்ளும்.வர்ணங்களுக்கு எப்போதுமே மனித மனத்தை எளிதில் மாற்றும் சக்தி உண்டு. கறுப்பை அணியும்போது மற்றவர்கள் துக்கம் விசாரிக்கிறார்கள். இளம் வர்ணத்தை மனிதர்கள் அப்படி பார்ப்பதில்லை.

எனவே சுவரில் மர வேலைப்பாடு (கீகிலிலி றிகிழிணிலிமிழிநி) செய்வதாக இருப்பினும் இளம் வர்ண மரங்களை பயன்படுத்தி மனதை இதம் ஆக்கி மகிழ்விப்போம். வரவேற்பறை கண்ணாடிகளையும் சுத்தமான வெள்ளை நிறத்திலும், இதில் ஏதேனும் படங்கள் வரைவதானால் அதையும் வெளிர் வர்ணங்களிலேயே செய்வது சிறந்ததாகும்.வரவேற்பறையில் பெரிய அலங்கார விளக்கு, சிறிய வீடாயினும், பெரிய வீடாயினும் வரவேற்பறையின் மையத்தில் இருந்தால் ‘ச்சீ’ சக்தி பெருகும். மகாபாரதத்திலும் இது குறித்த நிகழ்வு ஒன்று உண்டு. வீட்டை முழுவதும் நிரப்பு என்றவுடன் துரியோதனனைச் சார்ந்தோர் வைக்கோலால் நிரப்பியதும், பஞ்ச பாண்டவர்கள் மையத்தில் தீபம் ஒன்று வைத்து வெளிச்சத்தை வீடு பூராவும் நிரப்பி அறிவு சார்ந்த செயல் திறமையைக் காட்டினார்கள்.

மங்களத்தைக் குறிக்க வாஸ்துவில் தீபம் இருக்கிறது என்றால், பெங்சூயி, சிபிகிழிஞிமிலிமிணிஸி  எனப்படும் மைய விளக்கு வைக்க பரிந்துரைக்கிறது. மைசூர் அரண்மனையில் பெல்ஜியம் கண்ணாடி யால் ஆன விளக்கும், மதுரை நாயக்கர் மகாலில் பிரமாண்ட விளக்கும், இன்றும் பெரிய பெரிய கட்டிடங்களில் சேண்ட்லியர்
விளக்குகளும் பிரகாசிப்பதைக் காணலாம்.

(பழைய சினிமா படங்களில் கதாநாயகன் இவ்விளக்கை பிடித்து சண்டை போட்டு வெற்றியடைவதை நினைவு கூறதக்கதாகும்.)வரவேற்பறையின் சுவர்களில் இயற்கை காட்சிகளான நீர்வீழ்ச்சி, மலைகள், உயரமான மரங்கள் போன்றவற்றை மேற்கு, தெற்கு சுவர்களிலும், கடல், நீர்நிலை, தாமரை, அல்லி போன்றவற்றை வடக்கு,

 கிழக்கு சுவர்களில் அலங்கரித்தால், நல்சக்திகள் பெருக, வரவேற்பு அறையின் முக்கியத்துவத்தை உணர முடியும்.ஐநா சபை பொதுக்கூடம் மற்றும் இதர மேடைகளிலும் இவ்விதம் இருப்பதை செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் காணமுடியும்.எக்காரணம் கொண்டும் செருப்புகளை வரவேற்பறையில் இடம் பெறச் செய்யலாகாது. அவற்றை வெளியே அடுக்கு பலகையில் அடுக்கி வைக்கவும். சிதறி இருக்கக் கூடாது.

வரவேற்பறையின் நேர்த்தியைப் பொறுத்தே குடும்ப ஒற்றுமை உறவுகள் மேம்பாடு ஆகியவை அமையும்.வரவேற்பறை சதுரமாகவோ, செவ்வக வடிவமாகவோ இருக்க வேண்டும். எண்கோணம்,

அல்லது 4 மூலைகளை விட அதிகமாக இருக்குமானால், இங்கே நிகழும் நிகழ்வுகள் உறுதி இன்றியும் முடிவு இல்லாதவையாகவும் இருக்கும். எனவே 4 மூலைகள் மட்டும்  தெரியும் வகையில் தடுப்புகளை அமைத்து கெட்ட சக்திகளை வெளியேற்றி நற்சக்தி வரவழைக்கும், நற்சக்திகள் தங்கும் அறையாக வரவேற்பறை இருக்க வேண்டும்.

ஷிலிளிறிணிஞி ஸிளிளிதி எனப்படும் சாய்தள கூரை கெட்ட சக்திகளை உள்வாங்கி நிலைபெறச் செய்துவிடும். இதேபோல் மரவேலைகளில் உத்தரங்கள் தெரியக்கூடாது. இவற்றை அதன் அடிபாகத்தில் பலகைகளை (திகிலிஷிணி சிணிமிலிமிழிநி) இணைத்து சமமாக்கவும். ஏற்றத் தாழ்வு கொண்ட உட்கூரை குடும்ப பிளவை ஏற்படுத்தும். சந்ததி நஷ்டம் கண்டு, தனிமையில் வாடும் நிலைக்கு தள்ளப்படும்.

வரவேற்பறையின் தரையையும் வாஸ்து,பெங்சூயி முறைப்படியே அமைப்பது சிறந்த தாகும். அடர் வண்ணங்கள் கொண்ட தரையை அமைக்கலாகாது. கறுப்பு, சிவப்பு, பச்சை, ராயல் நீலம் போன்றவை வீடுகளுக்கு ஏற்ற வர்ண தரைகள் அல்ல. இளம் வர்ணங்களை உடைய தரையை தேர்ந்தெடுப்பது நல்லது.இப்போதெல்லாம் வாடிக்கையாளர்கள் மார்பிள், கிரானைட்டை தவிர்க்க வேண்டுமா என கேட்கிறார்கள். கிரானைட் தரையின் வழவழப்பானது ஒலிகளை எளிதில் எதிரொலிக்க செய்யும்.

மேலும் வெப்பத்தையும் உடனே கிரகித்துக்கொள்ளும். தமிழ்நாடு வெப்பப்பகுதியாகும். இந்நிலையில் மேலும் வெப்பத்தை உள்வாங்கி, மெதுவாக வெளிவிடும். அப்போது வீடு முழுவதும் வெப்பமண்டலமாக சூடாகிவிடும். இது கெடுதல்களை விளைவிக்கும். பாறை (நிஸிகிழிமிஜிணி பாறையே!) மீது வெயிலில் நடந்த அனுபவம் (கோயிலில் மதியம் வலம் வரும்போதும்) உங்களுக்கு இருந்திருக்கும். எனவே வெப்பப் பகுதியான நமக்கு கிரானைட் என்பது சரியான தரைப்பகுதி அமைப்பு அல்ல.       

சரி, மார்பிள்ஸ் போடலாமா? மார்பிள் என்பது நம் பகுதியை சேர்ந்த மென்மையான பாறை அல்ல. குளிர் பிரதேசத்தில் பூமிக்கடியில் கிடைக்கக்கூடிய மென்மையான பாறையாகும். இது குளிர்ச்சியை ஏற்று தக்க வைத்துக்கொள்ளும். குளிர் காலங்களில் மிகுந்த குளிர்ச்சியை பெற்றிருக்கும் மார்பிள் தரைமீது கால்களை பதிக்கும் போது உடல் முழுவதும் குளிர்ச்சி பரவுகிறது. எனவே சீதளம் அதிகமாகி குளிர் நோய்களை வரவழைக்க காரணமாகிறது. எனவே மார்பிளும் தமிழக பகுதிக்கு ஏற்றதல்ல.

சரி என்னதான் தரைக்கு போடலாம்? டைல்ஸ் (ஜிமிலிணிஷி), பெரும்பகுதி சுண்ணாம்பு கொண்டு சுடப்பட்டு தயாரிக்கப்படுவது. குளிரையும் வெப்பத்தையும் அதிகமாகவோ குறைவாகவோ ஈர்த்துக்கொள்ளாமல், இயல்பான மிதமான சீதோஷ்ணத்தை கொடுக்க வல்லது. நாயக்கர் மகால் போன்றவை இவ்வாறு சுண்ணாம்பால் கட்டப்பட்ட மாளிகைதான். டைல்ஸ் (TILES) நம் பகுதிக்கு மிக மிக ஏற்ற தரை அமைப்பாகும்.பல உரிமையாளர்கள் கிரானைட், மார்பிள் தரை அமைத்திருப்பார்கள், இவர்கள் 'மேட்' (MAT) எனப்படும் தரை விரிப்பை பயன்படுத்தி இக்குறைபாட்டினை சரி செய்யலாம்.

வரவேற்பறையில் திரைச்சீலை அமைத்திருப்போம். இதிலும் வாஸ்து / பெங்சூயின்படி கவனம் செலுத்த வேண்டும். இளம் வண்ணங்களில், தலைப்புகள் மட்டும் ஆழ்ந்த வண்ணத்தில் இருக்குமாறு தேர்ந்தெடுக்கவும். இதில் இலை, மலர்கள், இயற்கை காட்சிகள், சாகபட்சிகள், உயர்ந்த மரங்கள், கலை அம்சம் மிகுந்த கட்டிடம், கோயில்,

பரிசு பெறுவது போன்ற காட்சி, மாலை அணிவிக்கும் நிகழ்வு, வாழ்த்துகள் கூறும் காட்சி, சிகரங்கள், மலை முகடுகள், சிரிக்கும் புத்தர், குழந்தைகளின் ஓவியங்கள், பூஜை பொருட்கள் போட்டோ, மங்களகரமான காட்சிகள், பூ ஜாடிகள் போன்ற மனதை மகிழ்விக்கும் காட்சிகளை அந்தத் திரைச்சீலைகள் கொண்டிருக்குமானால், வரவேற்பறையில் உள்ளவர்களை உற்சாகப்படுத்தி 'ச்சீ' சக்தி பெருக்கத்தை தூண்டி நல்ல பலன்களை நமக்கு வாரி வழங்கும்.

(தொடரும்)
வாஸ்து பாஸ்கர்