அடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!



மொழி

Simile Vs Metaphor


அலுவலகத்தில் அனைவரும் ஆங்காங்கே கூடிப் பேசிக்கொண்டிருந்தனர். யாரோ செஞ்ச தப்புக்காக ரவியும் ப்ரவீணாவும் பலிகடா ஆக்கப்பட்டனர். சரியான சமயத்தில் ரகு அவர்களைக் காப்பாற்றினார். “எனக்கு சாமி மாதிரி சார் நீங்க” என்றான் ரவி. உடனே ப்ரவீணா “சாமி ‘மாதிரி’ என்ன ‘மாதிரி’…. சாமியேதான் சார் நீங்க” என்று நன்றி சொன்னாள்.

இருவரும் பேசியதை கேட்ட “Hei… Take it easy! இந்த சின்ன விஷயத்துக்கெல்லாம் ஏன் இவ்ளோ உணர்ச்சி வசப்படுறீங்க?” என்ற ரகு, நிலைமையை சகஜமாக்க, “அப்புறம் ரவி…. இன்னைக்கு ஏதும் சந்தேகம் இல்லையா?” எனச் சிரித்தவாறே கேட்டார்.  சகஜ நிலைக்குத் திரும்பிய ரவி, “விக்கிரமாதித்தனுக்கு சொல்ல வேதாளத்துக்கு கதை இல்லாமல் போகலாம் சார். ஆனா உங்ககிட்ட கேட்கறதுக்கு எனக்கு சந்தேகங்களுக்கு பஞ்சமே இல்லைங்க சார். சிமலி..(simile) மெடஃபர்….(metaphor) என்ற வார்த்தை களுக்கு என்னங்க சார் அர்த்தம்? இரண்டும் ஒண்ணுதானா இல்ல… வித்தியாசம் இருக்குங்களா சார்?” என்றான். “நல்ல சந்தேகம்.

அதுலயும் இந்த சூழ்நிலைல கேக்குறியே ரவி. அருமை! இரண்டு வார்த்தைகளின் குறிப்புப்பொருள் ஒன்றுதான். ஒன்றை இன்னொன்றுடன் ஒப்பிட்டுச் சொல்வது. (A type of comparing one with another) அதாவது, கொஞ்ச நேரத்துக்கு முன்ன என்னப் பார்த்து “நீங்க சாமி மாதிரி”னு சொன்ன இல்லயா? அதுதான் சிமலி. (simile  a figure of speech in which one thing is compared to another generally using like or as) உடனே அதுக்கு ப்ரவீணா என்ன சொன்னா? ‘சாமி மாதிரி என்ன மாதிரி? சாமியேதான்’னு சொன்னா இல்லயா? அதுல வந்த “சாமியேதான்”ங்கறதுதான் மெடஃபர். metaphor - a figure of speech in which one thing is compared to another generally NOT using ‘like’ or ‘as” என்றார் ரகு.

 இதைக் கேட்டுக்கொண்டிருந்த கம்ப்யூட்டர்ஆபரேடர் அகிலன் குறுக்கிட்டார். “அப்போ இந்த ப்ரவீணா இவ்வளோ ஒல்லியா இருக்காளே…
அவளைப் பார்த்து you are as Skinny as a tooth pickன்னு நான் சொன்னா, அது சிமலிதானே..?”

என்றார். அகிலன் நல்ல குண்டா இருப்பார். ப்ரவீணாவின் மிக நெருங்கிய நண்பரும் கூட. அவர் செய்த கிண்டலை கவனித்த ப்ரவீணா, “அப்போ நான் குண்டா இருக்கிற இவரைப் பார்த்து you are a Mountainனு சொன்னா அது மெடஃபர். இல்லைங்களா சார்?” என்று அகிலனுக்கு பதிலடி கொடுக்கற மாதிரி கேட்டாள் ப்ரவீணா. “Oh.. come on… Cool guys” என்றவாறே எழுந்து வெளியே சென்றார் ரகு.
 
ஆங்கில வார்த்தை சந்தேகங்களுக்குத் தொடர்புகொள்ள englishsundar19@gmail.com            

சேலம் ப.சுந்தர்ராஜ்