பெண் தொழில்முனைவோருக்கு 10 நாட்கள் பயிற்சி!பயிற்சி

அரசு வேலைதான் வேண்டும் என்றில்லாமல் சுயமாக தொழில் தொடங்கி அதன் மூலம் பலருக்கும் வேலைவாய்ப்பைத் தர நினைக்கும் இளைஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப் புதியதாகத் தொழில் தொடங்கும் தொழில்முனைவோர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சலுகைத் திட்டங்களை வழங்குகிறது. ஆனால், நிறைய பேருக்கு வழிகாட்டுதல் இல்லாததுதான் குறையாக உள்ளது.

தொழில்முனைவோருக்கு பயன்படும் வகையிலான திட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்றவையாக மத்திய அரசின் பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP), மாநில அரசின் புதிய தொழில்முனைவோர், தொழில் மேம்பாட்டுத் திட்டம் (NEEDS), வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை உருவாக்கும் திட்டம் (UYEGP) மற்றும் தாட்கோ (TAHDCO), முத்ரா வங்கி கடன் (PMMY), ஸ்டான்ட் அப் திட்டம் (STAND UP), ஸ்டார்ட் அப் திட்டம் (START UP) போன்ற திட்டங்கள் உள்ளன. இதன் மூலம் ஒரு லட்சம் முதல் ஒரு கோடி வரையில் தொழில் கடன் மானியத்துடன் பெறமுடியும்.

இதனைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொழில் மேம்பாட்டுப் பயிற்சி சென்னையில் உள்ள குறு,சிறு மற்றும்
மத்தியத் தொழில் மேம்பாட்டு நிறுவனம் இரண்டு வாரப் பயிற்சியினை வழங்குகிறது. இப்பயிற்சியினை அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு அமைப்புடன் இணைந்து நடைமுறைப்படுத்திவருகிறது. அந்த வகையில் தற்போது திருச்சியில் சி.ஆர். பிசினஸ் சொலுயுசன்ஸ் நிறுவனம் வழங்க உள்ளது.

இந்தத் தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி இலவசமாகப் பத்து நாட்கள் குறு, சிறு மற்றும் மத்திய தொழில் மேம்பாட்டு நிறுவனம் வழங்குகிறது. இப்பயிற்சியில் பெண்கள் கலந்துகொள்ளலாம். ஸ்கில் கிராப்ட், சிட்கோ தொழிற்பேட்டை, திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகம் எதிரில், மாத்தூரில் இந்தப் பயிற்சி நடைபெறும்.

இப்பயிற்சியில் தொழில் தேர்ந்தெடுத்தல், சந்தை நிலவரம் கண்டறிதல், மூலப்பொருட்கள் தேர்ந்தெடுத்தல் மற்றும் திட்ட அறிக்கை தயாரித்தல் போன்ற பல தொழில் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப் படும். இப்பயிற்சியானது வெற்றிபெற்ற தொழில்முனைவோர்கள், வங்கி மேலாளர், மாவட்டத் தொழில் மையம், அரசு ஊழியர்கள் மற்றும் தொழில் ஆலோசகர்கள் மூலமாக நடத்தப்படும்.

பயிற்சி முடித்தவர்களுக்கு மத்திய அரசின் குறு, சிறு மற்றும் மத்திய தொழில் மேம்பாட்டு நிறுவன சான்றிதழ் வழங்கப்படும். இந்தப் பயிற்சி அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்குகிறது.பயிற்சி பெற விருப்பமுள்ளவர்கள் கீழ்க்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம். சி.ஆர்.பிசினஸ் சொலுயுசன்ஸ் - 9789737886, 9345104264, 8056964444, 9840152798 (MSME-DI).

- தோ.திருத்துவராஜ்