என்.எல்.சி.இண்டியா நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி!வாய்ப்பு

நெய்வேலியில் இருக்கும் பழுப்பு நிலக்கரி நிறுவனம் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் என்ற பெயரில் செயல்பட்டுவந்தது. இது தற்போது என்.எல்.சி. இந்தியா எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்நிறுவனத்தில் தொழிற் பழகுநர் சட்டம் - 1961-இன் விதிகளுக்குட்பட்டு, கீழ்வரும் பிரிவுகளில் தொழிற் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குச் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஐ.டி.ஐ. முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 453

பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்:

1. Fitter     - 73
2. Turner     - 24
3. Mechanic (Motor Vehicle)- 83
4. Electrician     - 77
5. Wireman     - 63
6. Mechanic (Diesel)     - 17
7. Mechanic (Tractor)     - 21
8. Carpenter     - 04
9. Plumber     - 02
10. Welder     - 55
11. PASAA     - 17

பயிற்சிக் காலம்: மேற்கண்ட அனைத்துப் பிரிவுகளுக்கும் 1 ஆண்டு பயிற்சி அளிக்கப்படும்.
உதவித்தொகை: பயிற்சியின்போது மாதாந்திர உதவித்தொகையாக ரூ.7,406 வழங்கப்படும்.
கல்வித்தகுதி: மேற்கண்ட பயிற்சி இடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு
அங்கீகாரம் பெற்ற ஐ.டி.ஐ. நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
12. Medical Lab Technician (Pathology) & (Radiology) - 17
உதவித்தொகை: பயிற்சியின்போது மாதாந்திர உதவித்தொகையாக ரூ.6,480 வழங்கப்படும்.
பயிற்சிக் காலம்: 15 மாதங்கள்.
உதவித்தொகை: பயிற்சியின்போது மாதாந்திர உதவித்தொகையாக முதலாம் ஆண்டு ரூ.6,480, இரண்டாம் ஆண்டு ரூ.7,406 வழங்கப்படும்.
கல்வித்தகுதி: அறிவியல் பிரிவில்
+2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சி இடம்: நெய்வேலி
வயதுவரம்பு: 01.10.2017 தேதியின்படி
14 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க
தகுதியானவர்கள்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைத் ‘துணைப் பொதுமேலாளர், கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், வட்டம்-20, நெய்வேலி-607803’ என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சென்று சேரக் கடைசித் தேதி: 12.10.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.nlcindia.com/new_website/careers/trade_apprentice_training_22092017.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.