வாய்ப்புகள்வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி.  இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் இங்கே...

எஞ்சினியரிங் பட்டதாரிகளுக்கு இஸ்ரோவில் வேலை!

நிறுவனம்: இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வுத்துறை
வேலை: சயின்டிஸ்ட் மற்றும் எஞ்சினியர் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 80
கல்வித்தகுதி: பி.இ. அல்லது பி.டெக்கில் குறைந்தது 65 சதவீத மதிபெண்கள் எடுத்து முதல் வகுப்புத் தேர்ச்சி
வயது வரம்பு: 35-க்குள்
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 5.10.17
மேலதிக தகவல்களுக்கு: www.isro.gov.in

மகாராஷ்டிரா வங்கியில் சார்ட்டட் அக்கவுன்டன்ட் பணி

நிறுவனம்: பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா
வேலை: 7 பிரிவுகளில் சிறப்பு அதிகாரிகள் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 110. இதில் சார்ட்டட் அக்கவுன்டன்ட் வேலைக்கு மட்டுமே அதிகபட்சமாக 100 இடங்கள் காலியாக உள்ளன
கல்வித்தகுதி: சார்ட்டட் அக்கவுன்டன்ட் வேலைக்கு அந்தத் துறையில் பட்டப் படிப்பு படித்திருக்கவேண்டும்
வயது வரம்பு: 21 - 35
தேர்வு முறை: குரூப் டிஸ்கஷன் மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 7.10.17
மேலதிக தகவல்களுக்கு: www.bankofmaharashtra.in

+2 படித்தவர்களுக்கு எய்ம்ஸில் வேலை!

நிறுவனம்: மத்திய அரசின் மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆய்வுக்கான நிறுவனமான எய்ம்ஸ்
வேலை: பல்வேறு பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 305. இதில் லோயர் டிவிஷன் கிளார்க் 30, லேப் அசிஸ்டென்ட் 41, மல்டி டாஸ்க் ஃபோர்ஸ் 40 , ஸ்டெனோ 34 மற்றும் மேலும் பல்வேறு பிரிவுகளில் வேலை.
கல்வித்தகுதி: கிளார்க் வேலைக்கு +2, லேப் டெக்னீஷியன் வேலைக்கு அறிவியல் பாடங்களை எடுத்து +2 படிப்புடன் லேப் டெக்னீஷயன் படிப்பு, மல்டி டாஸ்க் வேலைக்கு 10வது படிப்புடன் ஐ.டி.ஐ. படிப்பு மற்றும் ஸ்டெனோ வேலைக்கு +2 படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
வயது வரம்பு: முதல் வேலைகு 18-30, இரண்டாம் வேலைக்கு 21-35, மூன்றாம் வேலைக்கு 18-27 மற்றும் நான்காம் வேலைக்கு 30க்குள் இருத்தல்வேண்டும்
தேர்வு முறை: எழுத்து, திறன் தேர்வு மற்றும்
நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 16.10.17
மேலதிக தகவல்களுக்கு: www.aiimsrishikesh.edu.in

விமான ஆணையத்தில் எக்ஸிக்யூட்டிவ் பணி!

நிறுவனம்: ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா எனும் மத்திய அரசின் இந்திய விமான ஆணையம்
வேலை: ஜூனியர் எக்ஸிக்யூட்டிவ் பதவியிலான சிவில், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்
துறைகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 200. இதில் சிவில் 50, எலக்ட்ரிக்கல் 50 மற்றும் எலக்ட்ரானிக்ஸ் 100
இடங்கள் காலியாக உள்ளன
கல்வித்தகுதி: வேலைப் பிரிவு தொடர்பாக பி.இ. அல்லது பி.டெக். படித்திருக்க வேண்டும்
வயது வரம்பு: பொதுப்பிரிவினர் 27க்குள், ஓ.பி.சி 30க்குள் மற்றும் எஸ்.சி/எஸ்.டி-யினர் 32க்குள்
விண்ணப்பிக்கவேண்டிய கடைசித் தேதி: 17.10.17
மேலதிக தகவல்களுக்கு: www.aai.aero/en

ஐ.டி.ஐ. படிப்புக்கு ரயில்வேயில் வேலை!

நிறுவனம்: மத்திய அரசின் ரெயில்வே பணியாளர் தேர்வு அமைப்பான ரயில்வே ரெக்ரூட்மென்ட் செல் நிறுவனத்தின் ஜெய்ப்பூர் கிளை
வேலை: கிளார்க், ஸ்டேஷன்
மாஸ்டர், லோகோ பைலட் உட்பட பல்வேறு பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 309. இதில் கிளார்க் கம் டைபிஸ்ட் 11, ஸ்டேஷன் மாஸ்டர் 57 மற்றும் அசிஸ்டென்ட் லோகோ பைலட் 159 போன்றவற்றில் அதிக காலிப்பணியிடங்கள் உள்ளன
கல்வித்தகுதி: முதல் வேலைக்கு 10வது படிப்புடன் தட்டச்சுத் திறன், இரண்டாம் வேலைக்கு டிகிரி மற்றும் மூன்றாம் வேலைக்கு 10வது படிப்புடன் ஐ.டி.ஐ அல்லது எஞ்சினியரிங் டிப்ளமோ தேர்ச்சி
வயது வரம்பு: 42-க்குள்
தேர்வு முறை: எழுத்து, திறன் தேர்வு மற்றும் மருத்துவ சோதனை
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 12.10.17
மேலதிக தகவல்களுக்கு: www.rrcjaipur.in

இந்திய ராணுவத்தில் ஃபயர்மேன் பணி!

நிறுவனம்: இந்திய ராணுவம்
வேலை: ஃபையர்மேன், டிரேட்ஸ்மேன் மேட் எனும் முக்கிய பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 102. இதில் அதிகபட்சமாக ஃபையர்மேன் 23, டிரேட்ஸ்மேன் மேட் 56 இடங்கள் காலியாக உள்ளது
கல்வித்தகுதி: 10வது படிப்பு
வயது வரம்பு: 18-25க்குள். சில பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு
தேர்வு முறை: தொழில் திறன், உடற்தகுதி மற்றும் எழுத்துத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 13.10.17
மேலதிக தகவல்களுக்கு: www.joinindianarmy.nic.in

எஞ்சினியரிங் படிப்புக்கு டெலிகம்யூனிகேஷன் வேலை

நிறுவனம்: டெல்லியில் உள்ள மத்திய அரசின் தொலைத்தொடர்பு ஆலோசனை நிறுவனமான டெலிகம்யூனி
கேஷன் கன்சல்டன்ட்ஸ் இண்டியா லிமிடெட்
வேலை: எஞ்சினியர் மற்றும் ஜூனியர் எஞ்சினியர்
காலியிடங்கள்: மொத்தம் 100. இதில் இரு வேலை
களிலும் தலா 50 இடங்கள் காலியாக உள்ளது
கல்வித்தகுதி: முதல் வேலைக்குப் பல்வேறு பிரிவுகளில் பி.இ. அல்லது பி.டெக் படிப்பும் இரண்டாம் வேலைக்கு எம்.சி.ஏ அல்லது எஞ்சினியரிங் டிப்ளமோ படிப்பும் அவசியம்
வயது வரம்பு: 40-க்குள்
தேர்வு முறை: நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 12.10.17
மேலதிக தகவல்களுக்கு: www.tcil-india.com

ரயில்வேயில் கூட்ஸ் கார்டு வேலை!

நிறுவனம்: ஹூப்ளியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மத்திய அரசின் தென்மேற்கு ரயில்வே
வேலை: கூட்ஸ் கார்டு
காலியிடங்கள்: மொத்தம் 136
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
வயது வரம்பு: 42க்குள். சில பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு
தேர்வு முறை: எழுத்து மற்றும் மருத்துவ சோதனை
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 3.10.17
மேலதிக தகவல்களுக்கு: www.rrchubli.in

தொகுப்பு: டி.ரஞ்சித்