என்னென்னவோ தெரியுது.. ஏதேதோ செய்யுது!ரீடர்ஸ் கிளாப்ஸ்!

நடுப்பக்க பளீர் படத்தைப் பார்த்ததுமே மார்கழிக் குளிருக்கு சூடாக ஜம்மென்று இருந்தது.
- கே.லட்சுமணன், நெய்க்காரப்பட்டி.

கோவா சர்வதேச திரைப்படவிழா குறித்து வி.பிரபாகர் எழுதுவது, வாசகர்களை கைப்பிடித்து கோவாவுக்கு அழைத்துச் சென்றது போலிருக்கிறது.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

‘பஞ்சாக்‌ஷரம்’ படம் குறித்த தகவல்கள் அப்படம் குறித்த எதிர்பார்ப்புகளை எகிறவைத்தன.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

முன்னட்டை ராக்‌ஷி கன்னாவும், பின்னட்டை சஞ்சனா நடராஜனும் உள்ளத்தைக் கொள்ளை கொண்டுவிட்டார்கள்.
- எம்.சேவுகப் பெருமாள், பெருமகளூர்.

‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ படத்தின் இரண்டாம் பாகம் வரவிருப்பதை எண்ணி இப்போதே கை, கால்கள் எல்லாம் வெடவெடக்கின்றன.
- கே.நடராஜன், திருவண்ணாமலை.

‘அவனே ஸ்ரீமன்நாராயணா’ படம் குறித்த தகவல்கள் படத்தைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டுகின்றன.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

நடுப்பக்கத்தில் மட்டுமா தெரியுது? புத்தகம் முழுக்கவே ஆங்காங்கே தென்படுகிற புளோஅப்களில் என்னென்னவோ தெரியுது. ஏதேதோ செய்யுது.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.